Posted by: ramrajya | May 15, 2016

அதிமுகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி உறுதி.

அதிமுகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி உறுதி.

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவது உறுதி என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எனது தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டங்களிலும், தெருமுனை கூட்டங்களிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நான் ஆற்றிய உரையைக் கேட்க லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு வந்தீர்கள்.
இந்த ஆதரவைப் பார்க்கும் போது, அதிமுக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இந்தத் தேர்தலில் பெறப் போவது உறுதி என்ற முழுநம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகம்-புதுச்சேரியில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தேன்.
அனைத்துத் தொகுதிகளிலும் “நானே போட்டியிடுகிறேன்என்ற உணர்வோடு வாக்களித்து, சிறப்பான வெற்றியை அதிமுகவுக்கு வழங்குவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற நில அபகரிப்பு, திமுகவினர் நடத்திய ரௌடிகள் ராஜ்ஜியம், 2ஜி ஊழல், சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் கட்டப் பஞ்சாயத்து, ஆகியவற்றை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
மாநிலத்திலும், மத்தியிலும் தங்களுக்கு இருந்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்ட கருணாநிதி குடும்பத்தினர், அனைத்துத் தொழில்களையும் தங்கள் வசப்படுத்தி, இளைய தலைமுறையினரின் தொழில் வாய்ப்புகளை தட்டிப் பறித்தனர்.
உரிமைகள் நிலைநாட்டல்: கடந்த 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நான், திமுகவினரால் நிகழ்த்தப்பட்ட அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் ஒழித்தேன். சட்டம்-ஒழுங்கை சீராக நிலை நாட்டினேன்.
எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத வகையில் அரசியலில் போராடி வருகிறேன். 
தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்னைகளான காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு அணை ஆகியவற்றில் நமது உரிமையைக் காப்பாற்றும் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வரை சென்று பெற்று வந்தேன்.
அதிமுக அரசு நிறைவேற்றி வந்திருக்கும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும், தனிமனிதரும் பயன் பெற்றிருக்கின்றனர். 
இந்த சாதனைச் சரித்திரம் தொடர்ந்திடும் வகையில், பல்வேறு வாக்குறுதிகள் உள்ளடக்கிய அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. மக்கள் அனைவரும் இரட்டை இளைக்கே வாக்களிப்பார்கள் என்பது உறுதி.நன்றி,வணக்கம்.
https://youtu.be/zssPk1axz4o


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: