Posted by: ramrajya | June 21, 2016

சமஸ்கிருதத்தை எதிர்க்கும் கருணாநிதி பேரக்குழந்தைகளுக்கு மட்டும் சமஸ்கிருத பெயர்களை வைத்துள்ளார்:

சமஸ்கிருதத்தை எதிர்க்கும் கருணாநிதி பேரக்குழந்தைகளுக்கு மட்டும் சமஸ்கிருத பெயர்களை வைத்துள்ளார்:

இந்தி  திணிப்புக்கும், சமஸ்கிருதத்திற்கும் எதிராக இருப்பதாக காட்டிக்கொள்கிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்களை சட்டசபையில் அ.தி.மு.க உறுப்பினர் செம்மலை முன்வைத்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து அ.தி.மு.க உறுப்பினர் செம்மலை பேசியதாவது:

கவர்னர் உரையை பலர் பாராட்டினார்கள். சிலருக்கு பாராட்ட மனமில்லை. இதுபற்றி முன்னாள் முதல்வர் அண்ணா ஒரு கருத்தை கூறியிருக்கிறார். பண்பு தெரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள். அது இல்லாதவர்களை பற்றி  கவலைப்பட வேண்டாம். இவ்வாறு செம்மலை கூறியதும், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல்-குழப்பம் நிலவியது.

அதைதொடர்ந்து செம்மலை பதிலளிக்கையில், நான் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பேசி இருக்கிறேன். என்னுடைய ஒரு வார்த்தை கூட அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதில்லை..  கூட்டணி இன்றி தனித்து மகத்தான வெற்றி பெற்று மக்களின் ஆதரவோடு மீண்டும் ஆட்சி அமைத்த முதல்வருக்கு நன்றி.  எதிர்க்கட்சியினர் உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை செய்த போதும் மக்கள் அதை ஏற்காமல் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்தனர். கவர்னர் உரை வெற்று அறிக்கை  என்றார்கள். அது முதல்வரின் வெற்றி அறிக்கையாகவே அமைந்துள்ளது.  தவறான பிரச்சாரம் செய்து ஆட்சியை அபகரிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள். தொடர்ந்து என் தமிழ் உரையைக்கேளுங்கள். நன்றி,வணக்கம். https://youtu.be/iwfwW7_HEfE


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: