Posted by: ramrajya | July 19, 2016

சோலார் பேனல் மோசடி வழக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கத்திற்கும் தொடர்பு.

சோலார் பேனல் மோசடி வழக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கத்திற்கும் தொடர்பு.

 பத்திரிகை செய்திகள்.

 சோலார் பேனல் மோசடி வழக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கத்திற்கும் தொடர்பு சரிதா நாயர் குற்றசாட்டு

 கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக  பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்டு செய்யப்பட் டனர்.

மோசடி புகாரில் கைதான சரிதாநாயர்  ஜாமீனில் விடுதலையானார். இவர் மீது திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கோவை உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் விசாரணைக்காக ஆஜராகி வருகிறார்.  இவர் மீது கோவையில் வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்து தருவதாக ஏமாற்றி விட்டதாக 2 நிறுவனங்கள் கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், உதவியாளர் ரவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பான விசாரணை கோவை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஆஜராக  சரிதா நாயர் இன்று கோர்ட்டுக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரள அரசு சோலார் பேனர் மோசடி குறித்து விசாரிக்க விசாரணை கமிஷனை அமைத் துள்ளது. இந்த கமிஷன்  முன்பு அனைத்து ஆதாரங் களையும் சமர்ப்பித் துள்ளேன். இது  அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று நம்புகிறேன்.மேலும் சோலார் கமிஷன்  கேரள அரசி டம் சில கருத்துகளை பரிந்து ரை செய்யும் என எதிர் பார்க்கிறேன். 

இதுவரை 13 பேர் மீது மோசடி ஆதாரங்களை அளித்துள்ளேன். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட 9 பேர் மீது டிஜிட்டல் ஆதாரங்களை அளித்துள்ளேன்.

இதில் முன்னாள் அமைச் சர்கள் ஆரியாடு முகமது, அனில்குமார்முன்னாள் நிதித்துறை இணை மந்திரி தி.மு.க. வை சேர்ந்த  பழனிமாணிக்கம்  ஆகியோரும் அடங்குவர்.

எது உண்மை என்பதை நீதி மன்றம்தான் சொல்லவேண்டும்.நன்றி,வணக்கம்.                                             

https://youtu.be/LK9ISzoTw7Q

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: