Posted by: ramrajya | July 19, 2016

பஞ்சலிங்க ஆலயம். எஸ்.வி.ரமணி.

பஞ்சலிங்க ஆலயம். எஸ்.வி.ரமணி.

மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் செல்கின்றன. மணல்மேடு என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் இலுப்பைப் பட்டு ஆலயத்தை சென்றடையலாம்.

 இவ்வாலயத்தில் பஞ்சபாண்டவர்கள் தனித்தனியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஐந்து லிங்கங்கள் அமைந்துள்ளன. பஞ்ச பாண்டவர்களில் தருமன் அறபண்புக்கும், பீமன் பலத்திற்கும், அர்ச்சுனன் வீரத்திற்கும், நகுலன் புத்திக்கும், சகாதேவன் பக்திக்கும் பெயர் பெற்றவர்கள். இந்த ஐந்து குணாதிசயங்களுக்கு ஏற்றாற்போல் ஐந்து சிவலிங்க ஆலயங்கள் இந்த இலுப்பைப்பட்டு பழமண்ணிப் படிக்கரையில் ஒருசேர அமைந்துள்ளன.

 பழமண்ணிப் படிக்கரை ஆலயத்தில் பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு நடத்துவதை அறிந்த துரியோதனன், சகுனியின் ஆலோசனையின்படி இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நஞ்சைக் கலந்து விடுகிறான். அந்த நச்சுக் குளத்தில் பஞ்ச பாண்டவர்கள் நீராட வரும்போது, அதுகுறித்து அம்பாள் ஈசனிடம் முறையிடுகிறாள். அம்பிகையின் பார்வை பட்டால் அந்த நச்சுக்குளம் அமிர்த குளமாக மாறிவிடும் என்று ஈசன் கூற, அப்படியே அம்பிகை செய்கிறாள். அதனால் இங்குள்ள அம்மனுக்கு அமிர்தகரவள்ளி என்று திருப்பெயர்.

 நீலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு அருகே, அர்ச்சுனன் வழிபட்ட படிக்கரை நாதர் ஆலயம் உள்ளது. படிக்கரை நாதருக்கு அருகே மங்களாம்பிகை அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. வம்பு வழக்குகள் நீங்கவும், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறவும் இந்த படிக்கரைநாதரை வணங்கி வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!

 பீமன் வழிபட்ட மகதீஸ்வரர், ஷோடஷ லிங்கமாகக் காட்சி தருகிறார். அதாவது இந்த லிங்கத் திருமேனியில் பதினாறு பட்டைகள் இருக்கும். திதி கொடுக்க இயலாதவர்கள்,பிதுர்கடன் உள்ளவர்கள் மகதீஸ்வரரை வழிபடுவதன் மூலம் அந்தக் கடமையை நிறைவேற்றலாம் என்பது ஐதீகம்.

 அடுத்ததாக, நகுலன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம், பரமேசர்! இவரை வணங்குவதன் மூலம் வீடு, வாகன வசதி, நிலபுலன்கள் கிடைக்கும். இதேபோன்று சகாதேவன் வழிபட்ட சிவலிங்கம், முக்தீஸ்வரர்! பக்தி இருந்தால் முக்தி நிச்சயம் என்பதை இத்திருநாமம் எடுத்துரைக்கிறது. இவரை வணங்குவதன் மூலம் ஜாதக தோஷங்கள், கால தோஷங்கள் என அனைத்தும் நீங்கிவிடும்.தொடர்ந்து என் தமிழ் உரையைகேளுங்கள்.நன்றி,வணக்கம்.

https://youtu.be/pgYyQtFhYvc


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: