Posted by: ramrajya | July 20, 2016

இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்டதை கதை கட்டி பேசுவது நியாயம்தானா? எஸ்.வி.ரமணி.

இளம்பெண் சுவாதி  கொலை செய்யப்பட்தை கதை கட்டி பேசுவது நியாயம்தானா? எஸ்.வி.ரமணி.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்

 சுவாதி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம்குமாரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கு தொடர்பாக எழும் சந்தேகங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

 திருமாவின் பேட்டிக்கு எதிராக, தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கலைச்செல்வி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், ‘ரம்ஜான் மாதத்தில் சுவாதி நோன்பு இருந்ததாக ஆதாரமில்லாத, அவதூறான தகவல்களைக் கூறி வருகிறார் திருமாவளவன். அவரது பேச்சுக்கள் அனைத்தும் கொலையில் கைதான ராம்குமாருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரது கருத்துக்கள் அனைத்தும் சட்டத்திற்கு விரோதமாக இருக்கின்றனஎனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதைப் பற்றிப் பேசும் பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா, “எங்களுக்குக் கிடைத்த தகவலோ வேறு விதமாக இருக்கிறது. ஆனால், திருமாவளவன் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கொலை வழக்கின் மறைக்கப்பட்ட பல உண்மைகள் அவருக்குத் தெரிந்திருக்கின்றன. எனவே திருமாவளவனிடம் போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் அவரைக் கைது செய்ய வேண்டும்” என்கிறார் அதிரடியாக. 

சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கை சிலர் திசை திருப்ப முயற்சிப்பதாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் பிணையில் வந்துள்ள யுவராஜ், சுவாதி கொலை வழக்குத் தொடர்பாக கட்செவி அஞ்சல் மூலம் ஒலித்தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சுவாதி கொலை வழக்கை தலைவர்கள் சிலர் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அவர்களின் பேச்சால் சுவாதியின் பெற்றோர் வேதனை அடைந்து வருகின்றனர்.
சுவாதி கொலை வழக்கில் போலீஸார் மிகவும் கஷ்டப்பட்டு ராம்குமாரை பிடித்துள்ளனர். 
அவர்தான் உண்மையாளி குற்றவாளி என்பதற்கான ஆதாரத்தை போலீஸார் முழுமையாகத் திரட்டியுள்ளனர்.
எனவே ஜாதி, மதப் பிரச்னையில் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தலைவர்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டால் அதை கதை கட்டி பேசுவது நியாயம்தானா?பொதுமக்களே நீங்களே தீர்ப்பளியுங்கள். நன்றி,வணக்கம்.
https://youtu.be/DHpGojC3CZc


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: