Posted by: ramrajya | July 21, 2016

கபாலி தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றி வெற்றி நடை போடுவார். எஸ்.வி.ரமணி.

கபாலி தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றி வெற்றி நடை போடுவார். எஸ்.வி.ரமணி.

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால், கபாலி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கபாலி படத்தைத் தடை செய்யக் கோரி மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகர்கள் நடித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு, தமிழக அரசு நிர்ணயித்துள்ள திரையரங்கு கட்டணத்தை விட, கூடுதல் கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், திரைக்கு வரும் கபாலி படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கடந்த 15-ம் தேதி தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுவை அனுப்பியுள்ளார். புகார் மீதான நடவடிக்கைக்கு போதிய கால அவகாசம் கொடுக்காமல், பட தயாரிப்பாளருக்கு எதிராக இடைக்கால உத்தரவு கோரப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க இயலாது; கபாலி படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், படம் வெள்ளிக்கிழமை வெளிவருகிற நேரத்தில், கபாலி படத்துக்கு தடை கோரி மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுக்ரா பிலிம்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், லிங்கா படத்தின் ஏற்பட்ட நஷ்டத்துக்கு உரிய இழப்பீட்டினை வழங்கவில்லை. எனவே இழப்பீடு வழங்காமல் கபாலி படத்தை வெளியிடக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனையடுத்து விளக்கம் அளிக்க ரஜினி, லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கபாலி வெற்றி நடை நடப்பார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. நன்றி,வணக்கம். https://youtu.be/cFieG68zfNo


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: