Posted by: ramrajya | July 26, 2016

தமிழ்நாடு இசை பல்கலை: துணைவேந்தர் வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல் எஸ்.வி.ரமணி.

தமிழ்நாடு இசை பல்கலை: துணைவேந்தர் வீணை காயத்ரிக்கு  கொலை மிரட்டல் எஸ்.வி.ரமணி.

 பத்திரிகை செய்திகள்.: சென்னையில், அமைச்சர்களின் பங்களாக்கள் அருகே உள்ள, இசை பல்கலையின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் பொருட்களை சூறையாடியுள்ளனர்; மேலும், பல்கலை துணைவேந்தருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். சென்னை, கிரீன்வேஸ் சாலையில், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலை உள்ளது. இதன் வேந்தர், முதல்வர் ஜெயலலிதா; துணைவேந்தர் பிரபல வீணை கலைஞர் வீணை காயத்ரி. இவர், பல்கலையில் பல படிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளார். ஆண்டுதோறும் பல்கலை யில் ஓவிய கண்காட்சி நடத்தி வருகிறார். பல கல்லுாரிகளுக்கும், இசை மற்றும் கவின் கலை தொடர்பான படிப்புகளுக்கும், இந்த பல்கலை மூலம் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல், பல்கலையின் ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, பல்கலை அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் சூறையாடப்பட்டிருந்தன. துணைவேந்தர் அறை, நிதி நிர்வாகி அறை உள்ளிட்ட, ஐந்து அறைகளில் பொருட்கள் சிதறிக் கிடந்தன; வேந்தர் ஜெயலலிதா, துணைவேந்தர் வீணை காயத்ரி படங்கள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும், அனைத்து அறைகளிலும் பெரிய காகிதத்தில், துணைவேந்தர் வீணை காயத்ரியின் பெயர் எழுதி, அவரை கொலை செய்வதாகவும்,’உன் சாவு என் கையில்…என்றும், தமிழ், ஆங்கிலத்தில் எழுதி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, பட்டினப்பாக்கம் போலீசில், பல்கலை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணைவேந்தர் வீணை காயத்ரியிடம் கேட்டபோது, ”தனிப்பட்ட முறையில் எனக்கு யாரும் எதிரிகள் இல்லை. நானும் யாரையும் மனம் புண்படும்படி நடந்ததில்லை. என்னை மிரட்டுவதற்கான காரணம் தெரியவில்லை; போலீசார் விசாரிக்கின்றனர்,” என்றார்.

தமிழக அமைச்சர்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பங்களாக்களுக்கு மத்தியில், இசை பல்கலை உள்ளது. பல்கலையின் முன்பக்கத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது.

காவலாளியும், 24 மணி நேர பணியில் இருப்பார். ஆனால், ‘பின்பக்கச் சுவர் வழியாக மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்திருக்கலாம்என, பல்கலை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்து

உள்ளனர். உடைக்கப்பட்ட பூட்டுகளில் பதிந்து இருந்த கைரேகைகள், தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

இசை உலகிற்கு பெருமை சேர்த்தவருக்கு களங்கம் உண்டாக்குவது,கண்டனத்திற்கு உரியது.இந்த சோதனையை யார் அறிவார்,யாரே அறிவார் கண்ணா? நன்றி,வணக்கம். https://youtu.be/Q5rAGbUVnsI


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: