Posted by: ramrajya | July 27, 2016

ஜூலை 27ல்அப்துல் கலாம் அவர்களுக்குமுதலாம் ஆண்டு நினைவுதினம்.எஸ்.வி.ரமணி.

ஜூலை 27ல்அப்துல் கலாம் அவர்களுக்குமுதலாம் ஆண்டு நினைவுதினம்.எஸ்.வி.ரமணி.

அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாடு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கில், மாதிரி பிரித்வி ஏவுகணைகள், ராக்கெட்டுகள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

அப்துல் கலாம் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி, ராமேஸ்வரம் அருகே, பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில், இன்று மத்திய, மாநில அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையடுத்து, கலாம் நினைவிடத்தில், டி.ஆர்.டி.ஓ., சார்பில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. அதில், கலாம் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள், எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ், ஆகாஷ், பிரித்வி, தனுஷ் ஏவுகணை மாதிரிகள், மிராஜ், மிக் 2, தேஜஸ் ஆகிய போர் விமானங்களின் மாதிரிகள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

கண்காட்சியை, இன்று முதல் ஆக., 1 வரை, பொதுமக்கள் பார்வையிடலாம்என, டி.ஆர்.டி.ஓ., அதிகாரி தெரிவித்தார்.

குடும்பத்தினர் பிரார்த்தனை : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதலாண்டு நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில், இன்று காலை மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, மனோகர் பரீக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் ராம்ராவ் பாம்ரே ஆகியோர் அஞ்சலி செலுத்துகின்றனர். தொடர்ந்து, 7 அடி உயர கலாமின் வெண்கல சிலையை அமைச்சர்கள் திறந்து வைத்து, நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுகின்றனர். கலாம் நினைவு நாளையொட்டி, அவரது மூத்த அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர், அவரது மகன், மகள், பேரன்கள் மற்றும் உறவினர்கள், இஸ்லாமிய முறைப்படி நேற்று அவரது நினைவிடத்தில், ‘துஆ‘(பிரார்த்தனை) செய்தனர்.

கலாம் அண்ணன் கூறுகையில், ”தம்பி இறந்து ஓராண்டு நிறைவையொட்டி, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி, ‘துஆசெய்தோம். அவர் எங்களை விட்டு பிரிந்தது வேதனையாக உள்ளது. ஆனாலும் அவர் எங்களிடமும், இந்திய மக்கள் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்,” என்றார்.

மக்கள் மனதில் வாழும் அப்துல் கலாம் அவர்களுக்கு நமது வணக்கத்தை தெரிவித்து அவர் வழியில் நடக்க சபதம் ஏற்போம். நன்றி,வணக்கம். https://youtu.be/ZBk8-l8SlEo


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: