Posted by: ramrajya | July 29, 2016

உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றி: அதிமுகவினருக்கு ஜெயலலிதா அன்பான வேண்டுகோள்

உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றி: அதிமுகவினருக்கு ஜெயலலிதா அன்பான வேண்டுகோள்

உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றிடும் வகையில், அதிமுகவினர் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறினார்.

பல்வேறு கட்சிகள், அமைப்புகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், ஜெயலலிதா பேசியது:-

அதிமுகவில் இணைந்துள்ளோரின் அரசியல் வாழ்வில் புது வசந்தம் மலரும். அனைவரும் இன்றைக்கு உள்ள உற்சாகத்தோடு என்றைக்கும் அதிமுகவின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். அனைவரையும் அன்போடு அரவணைத்துச் செல்லும் உண்மையான ஜனநாயக இயக்கம் அதிமுக என்பதால், இனி வரும் காலங்களில் அரசியலில் வெற்றிகளைக் காண்பீர்கள்.

தமிழகத்தில் வாழும் மக்கள் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்படுகிறேன். இதற்காக, என்னையே (ஜெயலலிதா) அர்ப்பணித்து அயராது உழைத்து வருகிறேன்.

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி:

அதிமுக அரசு மக்களுக்கு ஆற்றி வரும் மகத்தான பணிகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெற்றிடும் வகையில், அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, அரியலூர், கரூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், தமாகா, தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளில் பணியாற்றிவரும் 31,834 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

இவர்களில் பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் 2 பேர், நகர்மன்ற உறுப்பினர்கள் 9 பேர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் 8 பேர் உள்ளிட்டோரும் அடங்குவர் என்று அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுகவின் வெற்றிக்கு அனைவரும் ஒன்று பட்டு உழைக்கவேண்டும்.நன்றி,வணக்கம். https://youtu.be/7XQ8n_7pgI0


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: