Posted by: ramrajya | August 5, 2016

கருணாநிதி மீது கடும் புகார்:தி.மு.க., வெளிநடப்பு விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பதில்.எஸ்.வி.ரமணி.

கருணாநிதி மீது கடும் புகார்:தி.மு.க., வெளிநடப்பு விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பதில்.எஸ்.வி.ரமணி.

மதுவிலக்கு தொடர்பான முதல்வர் பேச்சுக்கு பதிலளிக்க, சபாநாயகர் வாய்ப்பு தராததை கண்டித்து, தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.

முதல்வர் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா: நான் ஒரு ஒழுங்கு பிரச்னையை எழுப்புகிறேன். எதிர்க் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தன் இருக்கையை விட்டுவிட்டு, எதிர்க்கட்சி தலைவர் இருக்கைக்கு சென்று பேசுகிறார். இது தவறு.

சில கருத்துக்களை இந்த சபையில், இந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்வது என் கடமை. 1971 ஆகஸ்ட் மாதம், அன்றைய முதல்வர் கருணாநிதி யால் மதுவிலக்கு நீக்கப்பட்டது. இந்தியா வில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள், சாராயம் மற்றும் கள்ளு கடைகள், மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டன.

கடந்த, 2007ல், சட்டசபையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என, பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசினர். அப்போதைய முதல்வர் கருணாநிதி, ‘கள்ளச்சாராயம் என்பது ஒழிக்க முடியாத ஒன்று. மதுவிலக்கு திட்டத்தில், நாம் மற்ற நாடுகளோடு போட்டி போடுவது என்றால், அவர்களை விட இன்னும் நல்ல சரக்குகளை, இங்கே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில் தான், வெற்றி பெற முடியுமே தவிர, வேறு வழியில் வெற்றி பெற முடியாதுஎன்றார்.

மதுவிலக்கு குறித்து, இதுதான் கருணாநிதியின் உண்மையான கருத்து. ஆனால், என்னை பொறுத்தவரை, படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதில் உறுதியாக உள்ளேன்.

எனவே தான், மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற வுடன், மதுக்கடைகளின் நேரத்தை, இரண்டு மணி நேரம் குறைத்ததுடன், 500 கடைகளை மூடி உள்ளோம். எனவே, மதுவிலக்கில் உண்மையான அக்கறை கொண்டுள்ளது, அ.தி.மு.க., அரசு தான்.இவ்வாறு முதல்வர் பேசி முடித்ததும், மீண்டும், தி.மு.க.,வினர் எழுந்து பேச வாய்ப்பு கேட்டனர்; சபாநாயகர் மறுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தன. அவையில் தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, இப்பொழுது எல்லாம் எதிர்கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்றால் இரண்டு வார்த்தைகளை சொன்னால் போதும் ஒன்று கச்சத்தீவு, இன்னொன்று பூரண மதுவிலக்கு. இந்த இரண்டை பற்றி சொன்னாலே போதும் பதில் சொல்ல முடியாமல் எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்து விடுகின்றனர் என்று கூறினார்.
பத்திரிகைகளின் சில செய்திகளை உங்களுக்கு சொல்லி உள்ளேன்.நன்றி,வணக்கம். https://youtu.be/xiuQos8ofK4


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: