Posted by: ramrajya | August 25, 2016

கான்பூரில் முஸ்லிம் குடும்பம் 30 ஆண்டுகளாக கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகின்றனர்.

கான்பூரில் முஸ்லிம் குடும்பம் 30 ஆண்டுகளாக கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகின்றனர்.
கான்பூரில் முஸ்லிம் குடும்பம் ஒன்று 30 ஆண்டுகளாக தங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அவரது வீட்டில் கிருஷ்ணர் படங்களை அலங்காரம் செய்யப்பட்டு அவரது வீடு முழுவதும் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.
இது குறித்து அகமது கூறியதாவது: நாங்கள் கடந்த 29 ஆண்டுகளாக கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். அதேபோல் இந்த ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகிறோம்.

எங்களுடைய மகிழ்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் மட்டும் நாங்கள் கிருஷ்ணரை வழிபடவில்லை. நாட்டு மக்களிடையே அன்பு, அமைதி மற்றும் சகோரத்துவம் மேம்படுத்துவதற்காகவும் நாங்கள் கிருஷ்ணரை வழிபடுகிறோம். எங்கள் குடும்பம் கிருஷ்ணர் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளனர்.
அகமது வீட்டில் கிருஷ்ணர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அதனை வழிபடுவதற்காக ஏராளமான பொதுமக்கள்
அவரது வீட்டிற்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

அகமது கிருஷ்ணர் மீது கொண்டுள்ள நம்பிக்கையை அனைத்து இந்துக்களும்,பாராட்டுவதுடன்,இந்து,முஸ்லீம் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டியாக அனைவரும் பாடுபடுவதுடன்,இனத்துவேசத்தை ஒழிப்போம் என்று கிருஷ்ணர் பிறந்த நாளில் உறுதி மொழி ஏற்கவேண்டும். அனைத்து மக்களும் செல்வமும்,சீரான உடல் நலமும் பெற்று பெரு வாழ்வு வாழ கிருஷ்ணர் அருளை நாடுவோம். நன்றி,வணக்கம். https://youtu.be/A8Fh0kzTYHs


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: