Posted by: ramrajya | August 28, 2016

மது விருந்தில் நடிகர் அருண் விஜய். போதையில் கார் ஒட்டி போலீஸ் வாகனத்தின் மீது மோதினார்.

மது விருந்தில் நடிகர் அருண் விஜய். போதையில் கார் ஒட்டி போலீஸ் வாகனத்தின் மீது மோதினார்.

பத்திரிகை செய்திகள்.

குடி போதையில் கார் ஓட்டி, போலீஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய், போலீஸ் காவலில் இருந்து, தப்பி ஓடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். இவர், பாண்டவர் பூமி, மாஞ்சா வேலு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு நடந்த, நடிகை ராதிகாவின் மகள் ரயானே- மற்றும் -மிதுன் ஆகியோரின் திருமண வரவேற்பில், மனைவி ஆர்த்தியுடன், அருண் விஜய் பங்கேற்றார்.

நிகழ்ச்சியை முடித்து, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை வழியாக, நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், ‘பி.எம்.டபுள்யூ’ சொகுசு காரில், மனைவி ஆர்த்தியுடன், வீட்டுக்கு கிளம்பினார். அப்போது, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே தாறுமாறாக ஓடிய கார், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வாகனம் மீது மோதியது.

சத்தம் கேட்டு, காவல் நிலையத்தில் இருந்த போலீசார் ஓடி வந்து பார்த்த போது, அருண் விஜய், போதையில் தள்ளாடியபடி காரை விட்டு இறங்கினார்; அவருடன் மனைவி ஆர்த்தியும் கீழே இறங்கினார்.

இருவரையும், காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்த போது, அருண் விஜய், செம போதையில் இருந்தது தெரியவந்தது. பரிசோதனையில், அவர் குடித்த மதுவின் அளவு, 59 சதவீதமாக இருந்தது. விபத்தில், போலீஸ் வாகனத்தின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது; அதேபோல், காரின் முன்பக்கமும் சேதமடைந்தது. தொடர்ந்து என் தமிழ் உரையைக்கேளுங்கள். நன்றி,வணக்கம். https://youtu.be/vNaT5rNO8fM


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: