Posted by: ramrajya | August 31, 2016

இங்கிலாந்து நாட்டில் மது போதை அதிகமாகி தோழியின் கன்னத்தை கடித்து குதறிய இளம்பெண். எஸ்.வி.ரமணி..

இங்கிலாந்து நாட்டில் மது  போதை அதிகமாகி தோழியின் கன்னத்தை கடித்து குதறிய இளம்பெண். எஸ்.வி.ரமணி..

பத்திரிகை செய்திகள்.

இங்கிலாந்தில் தோழியின் வீட்டில் நடைபெற்ற மது விருந்தில் கலந்து கொண்ட ஒரு இளம்பெண், மதுபோதையில் அவரது தோழியின் கன்னத்தை கடித்து எடுத்து விட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் தோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு மதுவிருந்து விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். சவுத் போட் என்ற நகரில் உள்ள ஒரு இளம்பெண்ணின் வீட்டில் அந்த விழா நடந்தது. அதில் கேட்டி நெய்லட் என்ற பெண் கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவில், ஒரு பெண் அளவுக்கு அதிகமான மது அருந்தினார் .  இதனால் அவருக்கு போதை தலைக்கு ஏறியது.

 அதன் விளைவாக, அவர் அருகிலிருந்து கேட்டிக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். முத்தம்தானே என்று அவரும் தடுக்கவில்லை. ஆனால் போதையேறி கிளர்ச்சியிலிருந்த அவர், அப்படியே கேட்டியின் கன்னத்தை கடித்தார்.  கடி வாங்கிய கேட்டி வலி தாங்க முடியாமல் அலறினார். ஆனாலும்  அந்த பெண், அவரை ஆழமாக கடித்து அவரின் கன்னத்தின் சதையை எடுத்து துப்பி விட்டார்.

 வலிதாங்க முடியாமல் அலறிய கேட்டியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். போகும்போதே அந்த பெண், கடித்து துப்பிய சதை பகுதியையும் எடுத்து சென்றுள்ளார்கள். மருத்துவர்கள் அந்த சதையை எடுத்து கேட்டியின் கன்னத்தில் ஒட்ட வைத்து சிகிச்சை செய்துள்ளனர்.

 இருந்தாலும், அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.இது தொடர்பாக கேட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை. மது தனது பிடியை சமூகத்தை நோக்கி நெருக்கிக் கொண்டே போகிறது. மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம்.

சில பெண்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை காட்டிக்கொள்ள குடிக்கிறார்கள். தான் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவள் இதெல்லாம் அங்கே சாதாரணம் என்கிறார்கள். வெளிநாட்டு தட்பவெப்பம் வேறு. இந்திய தட்பவெப்பம் வேறு. மதுவுக்கு அடிமை ஆகாதீர்கள்.குறிப்பாக பெண்கள் மதுவுக்கு அடிமை ஆகக்கூடாது என்பது நமது வேண்டுகோள். நன்றி,வணக்கம். https://youtu.be/LjtO8fTdkGU


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: