Posted by: ramrajya | September 5, 2016

ஒரு பாடலுக்கு நடனம் ஆட தமன்னாவுக்கு ரூ.75 லட்சம் சம்பளம் காஜல் அகர்வால் ரூ.50 லட்சம் வாங்குகிறார்

ஒரு பாடலுக்கு நடனம் ஆட தமன்னாவுக்கு ரூ.75 லட்சம் சம்பளம் காஜல் அகர்வால் ரூ.50 லட்சம் வாங்குகிறார்

 பத்திரிகை செய்திகள்.

கதாநாயகிகள் சிலர், படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சம்பாதிக்கிறார்கள். ஓரிரு நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடன காட்சியை முடித்து கொடுக்கின்றனர். இதற்கு பெரும் தொகையை சம்பளமாக வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் மேலும் சில முன்னணி கதாநாயகிகள் ஒரு பாடலுக்கு ஆடுவது இல்லை என்பதை கொள்கையாக வைத்து இருக்கிறார்கள்.

நயன்தாரா சிவகாசிபடத்தில் விஜய்யுடன் கோடம்பாக்கம் ஏரியாஎன்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் பல்லேலக்காஎன்ற பாடலுக்கும் நடனம் ஆடினார். இதற்காக பெரிய தொகையை சம்பளமாக வாங்கிக்கொண்டார். ஸ்ரேயா, அஞ்சலி, உள்ளிட்ட மேலும் பல கதாநாயகிகளும் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளனர். இதுபோல் முன்னாள் கதாநாயகிகள் மீனா, சிம்ரன், ரோஜா போன்றோரும் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறார்கள்.

தற்போது முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் தமன்னா, காஜல் அகர்வால் போன்றோரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். காஜல் அகர்வால் சமீபத்தில் வெளியான ஜனதா கேரேஜ் என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இதற்காக அவர் ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டார். மேலும் ஒரு பாடலுக்கு ஆடும்படி அழைக்கும் தயாரிப்பாளர்களிடம் இதே தொகையை கேட்கிறார்.

நடிகை தமன்னாவை கர்நாடக முன்னாள் முதல்மந்திரி குமாரசாமியின் மகன் நிர்மல் குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் ஜாகுவார் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தனர். தமன்னாவும் அதில் ஆட சம்மதித்து ரூ.1 கோடி சம்பளமாக கேட்டார். தயாரிப்பாளர் பேரம் பேசியதில் ரூ.75 லட்சமாக குறைத்துள்ளார். இந்த பாடல் காட்சி அடுத்த வாரம் படமாக உள்ளது. இதில் ஆட முதலில் நடிகை சுருதிஹாசனை அழைத்ததாகவும் அவர் மறுத்து விட்டதால் தமன்னாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கதாநாயகிகளே ஒரு பாடலுக்கு நடனம் ஆட முன் வருவதால், கவர்ச்சி நடன நடிகைகள் வாய்ப்பு இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.கவர்ச்சி நடிகைகளை காப்பாற்ற யார் முன் வருவார்களோ தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி,வணக்கம். https://youtu.be/I8Btglv3L8c


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: