Posted by: ramrajya | September 15, 2016

காவிரி பிரச்னையில் தமிழகத்தில் 16-9-16 முழு கடையடைப்பு:. ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு .

காவிரி பிரச்னையில்  தமிழகத்தில் 16-9-16 முழு கடையடைப்பு:. ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு .

காவிரி பிரச்னையில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில், இரு மாநிலங்களுக்கும் பொதுவாக உள்ள ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் குரல் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை தமிழக பாஜக ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கர்நாடக எல்லைகளை கடந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. அவர்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளனர். தமிழர்கள் இங்கு பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார்கள். கர்நாடகத்தில் ஒருசில கட்சிகளே கலவரத்தை தூண்டி விடுகின்றன. இரண்டு மாநில மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்து வருகிறார். தேச ஒற்றுமையை பாதுகாக்க பாஜக தொடர்ந்து பாடுபடும்.
சித்தராமையா பதவி விலக வேண்டும்: கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றார் அவர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோ கலந்துகொண்டனர்

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகத்தில் செப்டம்பர் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்துக்கு திமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட், தமாகா, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அன்றைய தினம் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் என்று பெட்ரோல் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.
அதுபோல் பால் முகவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுக, விடுதலை சிறுத்தைகள் சார்பில் அன்றைய தினம் ரயில் மறியல் போராட்டம்நடைபெறவுள்ளது.போராட்டம் நடைபெறும் அன்று சுமார் ஒரு லட்சம் போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கடையடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளும் விதமாக அன்றைய தினம் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் சுமார் 4,600 பெட்ரோல் பங்க்குகள் பங்கேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.பால் விநியோகம் இருக்காது:.

 

காவிரி நதி நீர் போராட்டம் வெற்றி பெற அனைத்து தமிழர்களும் ஒத்து உழைக்க வேண்டியது கட்டாயக் கடமை. நன்றி,வணக்கம். https://youtu.be/4RwCoZ8syeM


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: