Posted by: ramrajya | October 3, 2016

முதல்வர் ஜெயலலிதாவை கவர்னர் பார்த்தார் நல்ல முறையில் குணம் அடைந்து வருவதாக கவர்னர் தகவல்

முதல்வர் ஜெயலலிதாவை கவர்னர் பார்த்தார் நல்ல முறையில் குணம் அடைந்து வருவதாக கவர்னர் தகவல்

பத்திரிகை செய்திகள்.

 தமிழக முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி இரவு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

 உடனடியாக, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை மேற்கொண்டனர். தொடர்ந்து, டாக்டர்கள் அறிவுரைப்படி, அவர் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும், ஆஸ்பத்திரியில் இருந்தபடியே, காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து அரசு உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அரசு அலுவல்களையும் தொடர்ந்து கவனித்து வருகிறார்.

 இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவரும், அப்பல்லோ ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் குழுவினருடன் சேர்ந்து கொண்டு ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றார். ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்.

 இந்த நிலையில், நேற்று மாலை 6.40 மணிக்கு தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு காரில் வந்தார். அவரை, அப்பல்லோ ஆஸ்பத்திரி சேர்மன் பிரதாப் சி.ரெட்டி, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

 பின்னர், பிரதாப் சி.ரெட்டி தனது அறைக்கு கவர்னர் வித்யாசாகர் ராவை அழைத்து சென்றார். அங்கு, டாக்டர்கள் குழுவிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கவர்னர் கேட்டறிந்தார்.

 அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அறைக்கு கவர்னர் சென்றார். அவருடன் பிரதாப் சி.ரெட்டியும் சென்றார்.

 சுமார் 10 நிமிடங்கள் அந்த அறையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இருந்தார். அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை அவர் நேரடியாக பார்த்தார். பின்னர், சுமார் 35 நிமிடங்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்த அவர் இரவு 7.15 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டார்.

 முதல்-அமைச்சர் நன்கு குணமடைவதை அறிந்து கவர்னர் மகிழ்ச்சியுற்றார். முதல்- அமைச்சருக்கு சிறந்த மருத்துவ உதவிகளையும், சிகிச்சைகளையும் வழங்குவதற்காக டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். கவர்னர் பழக் கூடையை பரிசாக அளித்து முதல்-அமைச்சர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.

 முதல்வர் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.நன்றி,வணக்கம். https://youtu.be/MnCOz0WkQZQ


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: