Posted by: ramrajya | October 11, 2016

விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம்: குழந்தைகளுக்கு ‘ஓம்’ மந்திரத்தை நாவில் எழுதினார்கள்

விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம்: குழந்தைகளுக்கு ‘ஓம்’ மந்திரத்தை நாவில் எழுதினார்கள்

இன்று விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘ஓம்’ மந்திரத்தை நாவில் எழுதியும், நெல் தானியத்தில் குழந்தையின் கைகளால் ‘அ’ என்ற எழுத்தை எழுத வைத்தும் ஆரம்பக்கல்வி தொடங்கி வைக்கப்பட்டது.
பெண் தெய்வங்கள் மூன்று. லட்சுமி, சரஸ்வதி, பார்வதி. இதில் கல்விக்கான தெய்வம் சரஸ்வதி. சரஸ்வதி பூஜை முடிந்ததும் இன்று விஜயதசமி நாளில் குழந்தைகளை ஆரம்பப் பள்ளியிலும், வாய்ப்பாட்டு, நடனம், வாத்தியக்கருவிகள் வாசித்தல்-– ஆகிய வகுப்புகளிலும் சேர்க்கும் நன்னாள்.
வித்யா என்றால் கல்வி. குழந்தைகள் சிறந்த கல்வி செல்வத்தையும், எழுத்தாற்றலையும் பெற வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று பள்ளிகளிலும், கோவில்களிலும் நடைபெற்றது.
சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தையை மடியில் உட்கார வைத்து ‘ஓம் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ’ என்று குழந்தையின் கை பிடித்து அரிசியிலும், நெல்மணியிலும் எழுதினார்கள்.

ஹரி’ என்றால் அது ஆண்டவனைக் குறிக்கும். ‘ஸ்ரீ’ என்றால் செல்வம். சுபீட்சத்தைக் குறிக்கும். கோவிலின் குரு, குழந்தையின் நாக்கில் மெல்லிய தங்க ஊசியால் ‘அ’ என்றும் ‘ஓம்’ என்றும் எழுதி அட்சராட்பியாசத்தை துவக்கினார்.

 புத்தாடை அணிவித்து குழந்தைகளை பெற்றோர்கள் இன்று காலை கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு பய பக்தியுடன் சாமி கும்பிட்டு குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர்.
அதன்பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகாமையில் உள்ள பள்ளிகளில் கொண்டு வந்து சேர்த்தனர். குழந்தைகளை பெற்றோர்கள் தங்கள் மடியில் அமர வைத்து, ஒரு தட்டில் நிரப்பப்பட்ட நெல்மணிகளில் குழந்தையின் ஆள்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு ‘அ’ என்னும் எழுத்தையும் ‘ஓம்’ என்னும் எழுத்தையும் எழுத வைத்தனர். ஆசிரியர் ‘அ’னா என்று எழுத்தை சத்தமாகச் சொல்ல குழந்தைகள் அதை திரும்பச் சொன்னார்கள். சில மணி நேரம் பள்ளியில் குழந்தைகளை உட்கார வைத்துவிட்டு, பின்னர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். குழந்தைகள் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் பெற்றோரின் கைப்பிடித்து பள்ளிக்கு வந்தன.
அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையும், பத்தாவது நாளில் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஆயுத பூஜை விழா நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், 10வது நாளான வெற்றித்திருநாளாம் விஜயதசமி விழா தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ள மகாசரஸ்வதி ஆலயத்தில் விஜயதசமி விழா விமரிசையாக நடைபெற்றது. குழந்தைகளுக்கு அக்ஷராபியாசம் எனப்படும் ஓம் என்ற மந்திரத்தை நாவில் எழுதியும், நெல் தானியத்தில் குழந்தையின் கைகளால் ‘அ’ என்ற எழுத்தை எழுத வைத்தும், ஆரம்பக்கல்வி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தையுடன் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நமது  குழந்தைகளுக்குஎல்லா செல்வங்களையும் அருள கலைச் செல்வியாம் சரஸ்வதி தேவியை வேண்டுகிறோம். நன்றி,வணக்கம். https://youtu.be/sAErjKP_JFI


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: