Posted by: ramrajya | October 21, 2016

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் எழுந்து உட்கார முடிகிறது. எஸ்.வி.ரமணி.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் எழுந்து உட்கார  முடிகிறது. எஸ்.வி.ரமணி.

 பத்திரிகை செய்திகள்.

முதல் -அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி இரவு திடீர் உடல் நலக் குறைவு  ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சை காரணமாக அவர் உடல் நிலை சீரானது. படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை யில் திருப்திகரமான முன்னேற்றம்  ஏற்பட்டாலும் நுரையீரலில் ஏற்பட்ட நீர் தேக்கம் காரணமாக சில நாட்கள் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவித்தனர். ஜெயலலிதாவுக்கு புதிய நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் டாக்டர்கள்   கவனமாக இருந்தனர். எனவேதான் வி.ஐ.பி. பார்வையாளர்கள் கூட அவரைப் பார்க்க  அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உயர்தர நவீன சிகிச்சை முறைகளை மேற்கொள்ள லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே சென்னை  அப்பல்லோ மருத்துவமனைக்கு 2 தடவை வந்தார். அது போல டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று டாக்டர்களும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வரவழைக்கப் பட்டனர்.

லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் அப் பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஒருங்கிணைந்து தீவிர சிகிச்சை அளித்தனர். அடுத்த கட்டமாக சிங்கப்பூரில் இருந்து 2 பெண் பிசியோதெரபி பயிற்சி நிபுணர்களை அவர்கள் வரவழைத்தனர்.

கடந்த 5 நாட்களாக அந்த பெண் பிசியோதெரபி நிபுணர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சிகிச்சைக்குப் பிறகு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாத  சிகிச்சையில், இந்த வாரத்தில்தான் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு சிகிச்சையின் பலன் கிடைத் துள்ளது. டாக்டர்களின் ஒருங்கிணைந்த  குழு இடைவிடாமல் கண்காணித்து அளித்த தீவிர சிகிச்சைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருந்த நோய் தொற்றுகள் முழு மையாக குணம் அடைந்து விட்டன. நோய் தொற்று நீங்கி விட்ட காரணத்தால் நுரையீரலில் தொடர்ந்து வந்து கொணடிருந்த நீர் தேக் கம், சளி ஆகிய பிரச்சினை கள் தற்போது இல்லை.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நுரையீரல் செயல்பாடு சிறப்பாக இருப்பதால் நேற்று அவர் சற்று தெம்புடன் காணப்பட்டார். அவரால் எழுந்து உட்கார முடிவதாகவும் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடிவதாகவும் அப்பல்லோ மருததுவமனை டாக்டர்கள் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பிசியோதெரபி பயிற்சி சிகிச்சைக்குப் பிறகே முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் அதிகப்படியான முன்னேற்றம் ஏற்பட்டி ருக்கிறது. அதன்  பயனாக நேற்று முதல் அவர் வழக்கமான நிலைக்கு வரத் தொடங்கியுள்ளார்.

என்றாலும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சில கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள். விரைவில் அவை அகற்றப்பட்டு விடும் என்று தெரிகிறது. அதன் பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இயல்பாக பேச முடியும்.

அந்த நிலையில் வந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா  ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்புவார்  என்று கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த வாரம் கூட அவர் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தெரி கிறது.

அதற்கு முன்னதாக லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே மறுபடியும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சென்னை வர உள்ளார். விரைவில் அம்மா அவர்கள் குணமடைய எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போம். நன்றி,வணக்கம்.

https://youtu.be/s1dBpWyTQmc


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: