Posted by: ramrajya | November 6, 2016

மக்களின்முதல்வர்ஜெயலலிதா பிரத்யேகஅறைக்குதிங்கட்கிழமை மாற்றம்

மக்களின்முதல்வர்ஜெயலலிதாபிரத்யேகஅறைக்குதிங்கட்கிழமைமாற்றம்

 வழக்கமான உணவுகளை உட்கொள்ள துவங்கியுள்ள, முதல்வர் ஜெயலலிதா, திங்கட்கிழமை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, பிரத்யேக அறைக்கு மாற்றப்பட உள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக, முதல்வர் ஜெயலலிதா, செப்., 22 இரவு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக,அவர்அனுமதிக்கப்பட்டதாகஅறிவிக்கப்பட்டது.

ஓரிரு நாளில், அவர் வீடு திரும்பி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், அவரது நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்க, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே வரவழைக் கப்பட்டார். அவருடன், டில்லி, ‘எய்ம்ஸ்’ மருத்து வர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் இணைந்து, முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.

பிசியோதெரபி சிகிச்சைதொடர் சிகிச்சை காரணமாக, முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 40 நாட்களுக்கும் மேலாக, படுக்கையில் இருந்த படி, சிகிச்சை பெற்றுள்ளதால், கை, கால்களை அசைக்க, பிசியோதெரபி சிகிச்சை தரப்படுகிறது. அந்த சிகிச்சையை, சிங்கப்பூரில் இருந்து வந்த, இரண்டு பெண் மருத்துவர்கள்அளித்துவருகின்றனர்.

 

நுரையீரல் தொற்று குணமாகி உள்ள நிலையில், ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் முற்றிலு மாக நிறுத்தப்படவில்லை. செயற்கை சுவாசத்திற் கான குழாய்கள் ( Trechetomy) முற்றிலும் அகற்றப்படாத நிலை யில் அவ்வப்போது செயற்கை சுவாசம் நிறுத்தப் பட்டு, இயற்கையாகசுவாசித்துவருகிறார். 

உணவு தொடர்ந்து குழாய் மூலமே அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கடந்த சில தினங்களாக, அவருக்கு விருப்பமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. முதல்வரின் வீட்டிலிருந்துஉணவுவரவழைக்கப்பட்டுஅளிக்கப்படுகிறது. 

வீட்டில் இருந்து அவருக்காக பிரத்யேகமாக தயாரித்து எடுத்து வரப்பட்ட, கிச்சடியை விரும்பி உண்பதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் விரும்பும் உணவுகளை, மருத்துவமனையிலும் தயாரித்து வழங்குகின்றனர். முதல்வர் படுக்கை யிலேயே இருந்தாலும் தொலைகாட்சி நிகழ்ச்சி களை பார்க்கிறார்.

அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் உள்ள, விநாயகர் கோவிலில், திங்கட்கிழமை காலை, 6:00 மணியில் இருந்து, 7:00 மணிக்குள், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

கும்பாபிஷேகம் முடிந்ததும், ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, பிரத்யேகஅறைக்கு மாற்றப்படுகிறார். தற்போது, இரண்டாவது தளத்தில் உள்ள, தீவிர சிகிச்சை பிரிவில் (ICCU) ஜெயலலிதா இருக்கிறார். அவருக்காக பிரத்யேகமாக, இரண்டாவது தளத்தில், புதிய அறை தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த அறைக்கு, புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது. அந்த வாசனை தெரியாமலிருக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு,அறைதயார்நிலையில்உள்ளது.

அந்த அறையில், அனைத்து மருத்துவ வசதி களும் உள்ளன. பிரத்யேக அறைக்கு மாற்றப் பட்ட ஒரு வாரத்தில், அவருக்கு, சுவாசம் சீராக இருப்பதற்காக, தொண்டையில் பொருத்தப் பட்டுள்ள குழாய் அகற்றப்படும். பின், சிங்கப்பூர் மருத்துவர்கள், அவருக்குநடைபயிற்சிஅளிக்கஉள்ளனர்.

அதற்கான இட வசதியுடன்,புதியஅறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நன்கு நடக்க துவங்கிய தும், 10 நாளில், அவர் வீடு திரும்பு வார் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.https://youtu.be/FSSUXuAgCvc

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: