Posted by: ramrajya | November 8, 2016

கமல் விடா முயற்சி பற்றி சில இனிமையான செய்திகள்.எஸ்.வி.ரமணி.

கமல் விடா முயற்சி பற்றி சில இனிமையான செய்திகள்.எஸ்.வி.ரமணி.

ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் ரம்யா கிருஷ்ணன் சம்பவத்தால் எண்ணெய் ஊற்றப்பட்டு பத்திக் கொண்டதால் கவுதமி கமல் ஹாஸனை பிரிந்ததாக கூறப்படுகிறது. உலக நாயகன் கமல் ஹாஸனும், நடிகை கவுதமியும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ் இன் முறைப்படி 13 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கமலை பிரிவதாக கவுதமி கடந்த வாரம் அறிவித்தார். அறிவிப்பு வெளியிட்ட அவர் கமலை பிரிவதற்கான காரணத்தை குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. கமல் ஹாஸன், ஸ்ருதி ஹாஸன் நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்தில் ரம்யா கிருஷ்ணனும் உள்ளார். படத்தின் ஆடை வடிவமைப்பாளர் கவுதமி. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்தபோது கவுதமிக்கும், ரம்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். கவுதமி வடிவமைத்துக் கொடுத்த கவுனை அணிய ரம்யா கிருஷ்ணன் மறுத்துவிட்டாராம். இதனால் கடுப்பான கவுதமி நேராக கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டாராம். கமல் தன்னுடன் மோதிய ரம்யா கிருஷ்ணனும், கமல் ஹாஸனும் ரிசார்ட் ஒன்றில் தங்கியது குறித்து கவுதமிக்கு காத்து வாக்கில் தகவல் வந்ததாம். இதை கேட்ட கவுதமி கமல் மீது செம கடுப்பாகிவிட்டாராம். இந்த கடுப்பும் பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஸ்ருதி அமெரிக்காவில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு நடந்தபோது ஆடை தொடர்பாக கவுதமிக்கும், ஸ்ருதி ஹாஸனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
தோல்வி வந்து தலையை தட்டி படுக்க வைத்தாலும் அசராமல் புது முயற்சிகளில் ஈடுபடுவர் உலக நாயகன் கமல் ஹாஸன். உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் தரத்தை உலக அளவில் உணர வைத்தவர் என்று பெயர் எடுத்தவர் கமல். சினிமாவில் புதுமுயற்சி எடுக்க சற்றும் தயங்காத பரமக்குடிக்காரரை பற்றி சில சுவராஸ்யமான விஷயங்கள். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்திலேயே கமல் நடிப்பில் அசத்தியிருப்பார். முதல் படத்திற்காக அவர் குடியரசுத் தலைவரின் தங்க பதக்கத்தை பெற்றார். அது வெறும் துவக்கம் தான். கமல் ஹீரோவான புதிதில் தமிழில் வாய்ப்புகள் சரியாக இல்லாமல் தள்ளாடியபோது மலையாள திரையுலகம் அவரை வரவேற்று ஆதரித்து வாழ வைத்தது. கமல் ஹாஸன் இன்று இவ்வளவு பெரிய நடிகராக இருக்கிறார் என்றால் அதில் இயக்குனர் கே. பாலச்சந்தருக்கு பெரும் பங்கு உண்டு. பாலச்சந்தர் இல்லாமல் கமல் சிகரத்தை தொட்டிருக்க முடியாது. அவரின் இயக்கத்தில் 36 படங்களில் நடித்துள்ளார் கமல். ரிஸ்க் ரிஸ்க் எடுப்பது கமலுக்கு ரஸ்க் சாப்பிடுவது போன்று. வித்தியாசமாக ஏதாவது முயன்று படுதோல்வி அடைவார். இருப்பினும் மீசையில் பட்ட மண்ணை தட்டிவிட்டு மீண்டும் புது முயற்சியில் இறங்குவார். தொடர்ந்து என் தமிழ் உரையைக்கேளுங்கள். நன்றி,வணக்கம்.

https://youtu.be/gY9EJyqCrNI


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: