Posted by: ramrajya | November 12, 2016

இரண்டு லட்சம் கோடிகள் கள்ளப்பணத்தை ஒழிக்க முயலும் மோடியின் சாதனை இமாலய சாதனை.

https://youtu.be/B0hQJVUjMGo

இரண்டு லட்சம் கோடிகள் கள்ளப்பணத்தை ஒழிக்க முயலும் மோடியின் சாதனை இமாலய சாதனை.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ள, உ.பி., மாநிலம், பரேலி நகரில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக போட்டு சிலர் எரித்தனர் என்று பத்திரிகை செய்திகள் சொல்லுகின்றன. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், எரிந்த நிலையிலிருந்த ரூபாய் நோட்டுகளின் சில பாகங்களை கைபற்றினர்; ரூபாய் நோட்டுகளை எரித்தவர்களை தேடி வருகின்றனர்.

இந்தியாவில் சுமார் இரண்டு லட்சம் கோடிகள் மதிப்புள்ள கள்ளப்பணம் உள்ளது. இது அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் தீவிரவாதத்தை வளர்க்க கொண்டுவரப்பட்டவை. முந்தய ஆட்சியில், ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல் அடிக்கப்பட்ட சில எண் வரிசைகள் கொண்ட பணம் முழுவதும், காங்கிரஸ் கசானாவிற்கே சென்றது என்றும் செய்தி படித்துள்ளேன். பணம் இல்லாமல் தீவிரவாதம் இல்லை. காஷ்மீரில் கல் கொண்டு எரிபவர்களுக்கு தினமும் சுமார் 500 ரூபாய் கொடுக்கப்படுகிறது என்றும் கூறுவார்கள். ஜாகிர் நாயக் என்பவர் தன்  உறவினர்கள் கூட வருடத்திற்கு 60 கோடிகள் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக பத்திரிக்கையாளர்கள் சொல்லுகின்றனர்.

ஹவாலா மூலம் இனி வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பப்படுவது குறையும். பல பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் மாற்றமுடியாமல் தவிக்கும் பொழுதிலும், பலர் நாட்டிற்காக இதை ஏற்றுக்கொண்டும் உள்ளார்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே..

எரித்த நோட்டுக்கள் கணக்கில் வராத பணமாக இருக்கலாம்.சிக்கினால் மாட்டிக்கொண்டு அவமானப்படுவதை தவிர்க்க எரித்திருக்கலாம்.. அதை வேறொருவர் நல்ல கணக்கில் செலுத்தி, பயன்பெறுவதைக்காட்டிலும் இது நல்ல வழி .எப்படியும் இதே வேலையைத்தான் சிறுது காலம் கழித்துஇந்திய அரசாங்கம்  RBI செய்யப்போகிறது. பாகிஸ்தானால் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை போலியாக அச்சடிக்க முடியாது என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டு புதிதாக 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் குறித்து கடந்த 6 மாதங்களாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளது. இதனை போலியாக அச்சடிக்க முடியாதுஎன்றார். முன்னதாக பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் 500, 1000 ரூபாய் போலி நோட்டுக்கள் அச்சடிக்கும் தொழிற்சாலை இயங்கி வருவதாகவும், இங்கிருந்துதான் இவை இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றன. என்று கூறுகிறார்கள்.

மோடியின் அறிவிப்பால் பிரயோஜனம் இல்லை என்று சொன்ன கெஜ்ரி, ராகுல் மற்றும் கம்யூனிஸ்டுகள் தினசரி வரப்போகும் இதுமாதிரி செய்திகளால் வாயடைக்க.ப்போகிறார்கள். மோடியின் இமாலய சாதனையை பாராட்டுவோம்.நன்றி,வணக்கம். https://youtu.be/B0hQJVUjMGo


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: