Posted by: ramrajya | November 13, 2016

கறுப்பு பணத்தை ஒழிப்பதில் உயிரையும் தியாகம் செய்ய தயார், மோடியின் கண்ணீர் பேச்சு.எஸ்.வி.ரமணி.

கறுப்பு பணத்தை  ஒழிப்பதில்  உயிரையும் தியாகம் செய்ய தயார், மோடியின் கண்ணீர் பேச்சு.எஸ்.வி.ரமணி.

 நான் பிரதமர் ஆவதற்காக பிறக்கவில்லை. நான் எதையும் மறைக்கவும் இல்லை, நாட்டை இருளில் தள்ளவும் இல்லை என கோவா விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இது பற்றி நான் கவலைப்படவில்லை. உயிரையும் தியாகம் செய்ய தயார் என மோடி கண்ணீர் விழ உணர்ச்சி பொங்கிட பேசினார். 

 கோவா விழாவில் ரூ.500, 1000 வாபஸ் பெறப்பட்டது குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக பேசியதாவது: கறுப்பு பணத்திற்கு எதிராக போராடுவேன் என்ற எனது வாக்குறுதியை காத்து வருகிறேன். காங்., அரசு ஊழலுக்கு எதிராக போராடவில்லை. அதனால் தான் இப்போது நான் அதை செய்கிறேன். நான் எதையும் மறைக்கவும் இல்லை, நாட்டில் இருளில் தள்ளவும் இல்லை. கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கை இது. ஆனால் சிலர் இதை புரிந்து கொள்ளவில்லை. 
இந்திய பணம் ஏதாவது கொள்ளயைடிக்கப்பட்டிருந்தால் அதை இந்தியர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதே எங்களின் நோக்கம். அதனை கண்டறிவதும் எங்களின் கடமை. நவம்பர் 8 ம் தேதி நிறைய மக்கள் இந்தியாவில் அமைதியாக தூங்கினர். சில இடங்களில் சிலர் மட்டுமே இப்போது வரை உறக்கமின்றி அலைகின்றனர். கறுப்பு பணத்தால் நேர்மையான மக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து காப்பதற்கே இந்த முக்கிய நடவடிக்கை.
மக்கள் இந்த அரசை தேர்வு செய்துள்ளனர். அவர்கள் எங்களி
டம இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஊழலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக 2014 ல் நிறைய மக்கள் ஓட்டளித்தனர். நிறைய எம்.பி.,க்கள் நகை வாங்குவதற்கு பான் எண் அவசியம் என்ற கட்டுப்பாட்டை நீக்குங்கள் என என்னிடம் கூறினர். இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம்.
பிரதமர் நாற்காலியில் அமருவதற்காக நான் பிறக்கவில்லை. எனது குடும்பம், வீடு என அனைத்தையம் நாட்டிற்கான துறந்தேன். பினாமி பெயர்களில் இருக்கும் சொத்துக்கள் மீத நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய நடவடிக்கை இது. நீங்கள் கேட்கலாம் கறுப்பு பணத்திற்கு மீட்பு என்ன ஆயிற்று என்று. நான் செய்ய மாட்டேன் என எப்படி சொல்ல முடியும். போராட்டம் இப்போது தான் துவங்கி உள்ளது. இந்தியாவில் கறுப்பு பணம், ஊழலால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை.
 

70 ஆண்டுகால நோய்:

என்னை எல்லோரும் எதிர்ப்பார்கள் என எனக்கு தெரியும். ஏனெனில் 70 ஆண்டுகளாக கொள்ளையடித்தே வாழ்ந்து விட்டனர். இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் நான் எதற்கும் தயாராக இருக்கின்றேன். 70 ஆண்டுகளாக இருந்த கறுப்பு பண நோய் 17 மாதத்தில் தீர்ந்து விட்டது. மக்கள் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். இதனால் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். இன்று 2 ஜி ஊழல் புரிந்தவர்கள் எல்லாம் உங்களுடன் ஏ.டி.எம்.,மில் வரிசையில் நிற்கின்றனர். மக்களுக்கு சிரமத்தை தரும் என்று தெரியும். இருந்தும் இது இக்கட்டான தருணம். எனவே மக்கள் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அடுத்து பினாமி சொத்துக்கள் மீது நடவடிக்கை தொடரும். நாட்டின் வளர்ச்சி வேகம் விரைவில் இருக்கும். நான் பிரதமர் நாற்காலிக்காக வரவில்லை. இந்த நாட்டிற்காக வந்துள்ளேன். இந்த நாட்டிற்காக எனது குடும்பத்தினரை இழந்தேன். டிச. 30 க்கு பின் இன்னும் அதிரடி காத்திருக்கிறது.

ஏடிஎம்.,களில் வரிசையில் நிற்கும் மக்கள் மத்திய அரசிற்கு எதிரான நிலைப்பாட்டிற்காக நிற்கவில்லை. நாட்டை காக்க வேண்டும் என்பதற்காக, கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நிற்கிறார்கள். கறுப்பு பணம் பதுக்குபவர்கள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மக்கள் ஆதரிக்கிறார்கள். கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வரும் மிகப் பெரிய பணிக்காகவே ரகசியம் காக்கப்பட்டது. நேர்மையான மக்களுக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றோம். கறுப்பு பணத்தை ஒழிக்கும் போராட்டத்தில் என்னுடன் இணைய வாருங்கள்.
50
தினங்களுக்கு ஒத்துழைப்பு: இந்த நடவடிக்கையால் பணத்தை இழந்து, பாதிக்கப்பட்டவர்களே வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். அவர்கள் எனக்கு எதிராக நடவடிக்கைகளை செய்வார்கள், என்னை அழிக்க நினைக்கலாம். எதற்கும் நான் தயாராக உள்ளேன். நாட்டில் முதல் முறையாக ரூ.4.76 ஆயிரம் கோடி வங்கிகளில் டிபாசிட் ஆகி உள்ளது. இன்னும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் அத்தனையும் வெளியே வரும். கள்ள சந்தையில் நடக்கும் ஊழல்களை இத்துடன் இணைக்க வேண்டாம். அதுற்கான நடவடிக்கை விரைவில் துவங்கப்படும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எனது திட்டம். இதற்காக திட்டம் தயாராக உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற மக்களாகிய நீங்கள் இன்னும் ஒரு 50 தினங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்என பேசினார்.

ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற மோடியின் திட்டத்தை அனைவரும் ஆதரிப்போம். நன்றி,வணக்கம். https://youtu.be/eu6XG0dsufc

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: