Posted by: ramrajya | November 14, 2016

செல்லாத ரூபாய் நோட்டுகளை பாலியல் தொழிலுக்கு சொனாகச்சியில் பயன் படுத்துகிறார்கள்….

செல்லாதhttps://youtu.be/qhs7ujYiTvw ரூபாய் நோட்டுகளை பாலியல் தொழிலுக்கு சொனாகச்சியில் பயன் படுத்துகிறார்கள்….

பத்திரிகை செய்திகள்.

பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை மறுக்காமல் பாலியல் தொழிலில் உள்ள பெண்கள் பெற்றுக் கொள்வதால் கடந்த சில நாட்களில் சோனாகாச்சியில் பாலியல் தொழில் சூடு பிடித்துள்ளது. பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை மறுக்காமல் பெற்றுக் கொள்வதால் கடந்த சில நாட்களில் சோனாகாச்சியில் பாலியல் தொழில் சூடு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் பிரதமர் மோடி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். இதனால் கைவசம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் பாலியல் தொழிலாளிக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளதாம். அதிக வருமானம்… சில்லறைப் பிரச்சினை இல்லாமல் வாடிக்கையாளர்கள் தாராளமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பாலியல் தொழிலாளிகளுக்கு தருகிறார்களாம். இதனால் கடந்த சில நாட்களில் மட்டும் இரண்டு லட்ச ரூபாய் அளவிற்கு அவர்கள் வருமானம் பார்த்துள்ளார்களாம்.

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதி கொல்கத்தாவில் உள்ள சோனாகாச்சி ஆகும். இங்கு மட்டும் 1.3 லட்சம் பாலியல் தொழிலாளிகள் உள்ளனர். இவர்கள் கடந்த சில நாட்களில் தங்களுக்கு கிடைத்த மொத்த பணத்தையும், பாலியல் தொழிலாளிகள் அமைத்துள்ள உஷா பல்நோக்கு கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்துள்ளனராம்.

வழக்கமாக பாலியல் தொழிலாளிகள் தங்களது தினசரி வருமானத்தை அன்றன்று செலவுகளுக்கு பயன்படுத்தி விடுவர். ஆனால், கடந்த சில தினங்களில் அதிகளவு பணம் கிடைத்ததால் அவற்றை டெபாசிட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

அவர்கள் வருமானம் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகம்… சாதாரண நாட்களில் இரண்டு நாளில் ரூ.5 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டு வந்ததாகவும் தற்போது ரூ.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட வங்கியின் மூத்த அதிகாரி சாந்தனு கூறி உள்ளார்.

பணங்கள் நல்ல காரியங்களுக்கு செலவிடப்படுவதையே நம்மால் ஏற்றுக்கொள்ளப் பட முடியும். நன்றி,வணக்கம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: