Posted by: ramrajya | November 16, 2016

ஏழைகளுக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகளும்,நடிகர்களும் தங்கள் கோடிகளை என்ன செய்தார்கள்? எஸ்.வி.ரமணி.

ஏழைகளுக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகளும்,நடிகர்களும் தங்கள் கோடிகளை என்ன செய்தார்கள்? எஸ்.வி.ரமணி.

 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை மக்கள் மிகவும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று நடிகர் விஜய் கூறிய கருத்திற்கு, பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை மக்கள் மிகவும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று நடிகர் விஜய் கூறிய கருத்திற்கு, சினிமா பிரபலங்கள் அறிக்கை விடுவதை நிறுத்தி விட்டு பொது வெளியில் வந்து ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவ வேண்டும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஜய், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிரடியானதுதான். 20 சதவிகிதம் பேர் செய்யும் தவறினால் 80 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியிருந்தார்.

 பிரதமர் மோடியின் தாயாரும்,ஏழை, எளிய மக்களும்  வங்கிக்கு சென்று பணம் எடுத்ததை அனைவரும் பார்த்தனர். ஆனால் எதிர்கட்சித் தலைவர்களோ,நடிகர்களோ கோடிக்கணக்கில் குவித்து வைத்திருக்கும் பணத்தை எப்படி மாற்றினார்கள் என்பது தெரியாத புதிராக இருக்கிறது.ஆனால் அவர்கள் ஏழைகளுக்காக வாதாடுவதாகச்சொல்லி போலிக்கண்ணீர் வடிப்பதை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.எந்த ஏழைக்கும்  கோடிக்கணக்கில் பணத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை. தன் கைவசம் இருக்கும் பணத்தை ஒரு,இரு முறை மாறினாலே போதும். ஏழைகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நினைப்பது,பண முதலைகள்தான்.   

 இந்நிலையில், நடிகர் விஜய் கருத்துக்கு பதில் அளித்த வானதி கூறுகையில். பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார்… அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மருத்துவச் செலவுக்கு பணம் இல்லையே என்று இப்போது அல்ல; முன்பும் இறந்து போயிருக்கிறார்கள். ஏழை, எளிய மக்கள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானது போக மீதியை இந்த ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டால் ஏழை மக்களின் வேதனை, துயரம் போக்க உதவிகரமாக இருக்கும். அறிக்கை விடுவதை விட்டு விட்டு, பொது வெளியில் வந்து ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவுங்கள். நாட்டு மக்களின் பிரச்சினைகளை சரி செய்ய மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

 ஏழைகளின் கண்ணீரை துடைக்க கோடீஸ்வரர்கள் முன் வருவார்களா? நன்றி,வணக்கம். https://youtu.be/pi2XKijB4w0


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: