Posted by: ramrajya | November 20, 2016

மக்களின் முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம் அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாட்டம்

மக்களின் முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம் அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாட்டம்

பத்திரிகை செய்திகள்.

தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் 22-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.நவம்பர் 19-11-2016  அன்று தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் சிவகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் மற்றும் சிங்கப்பூர் பிசியோ தெரபிநிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோரும் சிகிச்சை அளித்தனர்.

.நுரையீரல் தொற்று முழுமையாக அகற்றப்பட்டு அவருக்கு பிசியோ தெரபிசிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றதை கண்டு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

 ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு டிரக்கியாஸ்டமிசிகிச்சை மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் செயற்கை சுவாசத்தின் அளவு படிபடியாக குறைக்கப்பட்டது. அதே வேளையில் உடல் அசைவு பயிற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

 அவர் வழக்கமான உணவுகளை எடுத்து வருவதாகவும், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார் என்றும் டாக்டர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் செயற்கை சுவாச உதவி இன்றி இயற்கையாக மூச்சு விடுவதற்கு சில பயிற்சிகளை ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் அளித்து வந்தனர். அது நல்ல பலனை தந்தது. அதன் தொடர்ச்சியாக பல மணி நேரம் இயல்பாக ஜெயலலிதா மூச்சுவிட்டும், நாற்காலியில் அமர்ந்து இளைப்பாறியும் வந்தார். அவர் இயல்பாக மூச்சுவிடுகிறார் என்றும், சாதாரண உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

 உலகத்தரமிக்க சிகிச்சை காரணமாக ஜெயலலிதா தினமும் 20 மணி நேரத்துக்கும் மேலாக செயற்கை சுவாசம் எதுவும் இன்றி இயற்கையாகவே சுவாசித்து வந்தார். தூங்கும் நேரத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

 ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதா இயல்பாகவே மூச்சுவிடுகிறார். அவருடைய நுரையீரல் விரிவடைவதற்காக 15 அல்லது 20 நிமிடங்கள் மட்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. அவர் நன்றாக இருக்கிறார். வீடு திரும்புவதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்என்று கூறியிருந்தார்.

 அவரது உடல்நிலை சீராக இருப்பதை கண்ட மருத்துவ குழுவினர் அவருக்கு முழுமையாக செயற்கை சுவாசத்தை அகற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர் சிகிச்சை காரணமாக உடல்நிலை தேறி வரும் ஜெயலலிதா எந்த நேரத்திலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆஸ்பத்திரி வளாகம் முன்பு தொடர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டும் வந்தனர். இந்த நிலையில் அவர் நேற்று மாலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 ஜெயலலிதா சாதாரண தனி வார்டுக்கு மாற்றப்படும் தகவலை அறிவதற்காக அ.தி.மு.க.வினர் ஆஸ்பத்திரி முன்பு ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் 59 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயலலிதா மாலை 5.30 மணி அளவில் தான் சிகிச்சை பெறும் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை வார்டில் இருந்து அதே மாடியில் கடைசியில் உள்ள சாதாரண தனி வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

 இந்த தகவலை அறிந்ததும் ஆஸ்பத்திரி முன்பு காத்திருந்த அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியில் ஆஸ்பத்திரிக்கு வந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு உள்ள விநாயகர் கோவிலில் கூட்டு பிரார்த்தனை நடத்தினர். நாமும் விரைவில் அம்மா அவர்கள் பூரண நலத்துடன் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்.நன்றி,வணக்கம். https://youtu.be/o6edCXnjnZg


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: