Posted by: ramrajya | November 21, 2016

ஸ்ரேயா சிம்புவுக்கு தாயாகநடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

ஸ்ரேயா சிம்புவுக்கு தாயாகநடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

பத்திரிகை செய்திகள்.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் கதை என்ன என்பது தெரிய வந்துள்ளது. ஸ்ரேயா சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறாராம். சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சிம்புவின் பரிந்துரையின் பேரில் ஒய்.ஜி. மகேந்திரன் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். படத்தில் ஸ்ரேயாவும் உள்ளார். இந்நிலையில் படத்தின் கதை பற்றி தெரிய வந்துள்ளது.

சிம்பு தந்தையாகவும், இரட்டையர்களாகவும் நடிக்கிறாராம். இரட்டையர்களில் ஒருவர் நிழல் உலக தாதாவாம். தாதா கதாபாத்திரம் வரும் காட்சிகள் துபாயில் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தந்தை சிம்புவின் வழி ஒரு வழி என்றால் அவரின் இரட்டையர் மகன்களின் வழி வேறு வழியாம். இது தான் கதையின் முக்கிய அம்சமாம். தந்தை சிம்புவுக்கு தான் ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார்.

தந்தை சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா இரட்டையர் மகன்களுக்கு அம்மா. அதாவது சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறார் ஸ்ரேயா. பாலிவுட்டிலும் கூட சீனியர் கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார் ஸ்ரேயா.

இரட்டையர்களுக்கு யார், யார் ஜோடி என்பது இன்னும் தெரியவில்லை..இதேபோல் ரஜினி ஜோடியாக நடித்த ஸ்ரேயா, தற்போது எந்த படம் என்றாலும் என்ன வேடம் கிடைத்தாலும் நடிக்கிறார். தமிழில் சிம்புவின் ‘அன்பானவன், அசராதவன் அடங்காதவன்’ படத்தில் வயதான சிம்புவின் ஜோடியாக நடிக்கிறார்.

 தெலுங்கில் மூத்த ஹீரோ பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக கவுதமி புத்ர சடர்கனிஎன்ற படத்தில் நடிக்கிறார். ஸ்ரேயாவை விட இரண்டு மடங்கு வயது மூத்த நாயகன் இவர். இந்த படத்தில் நடிக்கும் போது எடுத்த புகைப்படங்களை ஸ்ரேயா தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். படத்துக்கான முதல் போஸ்டர் கூட வெளியாகாத நிலையில் இந்த படங்களை பார்த்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நாயகன் பாலகிருஷ்ணா ஆகியோர் டென்ஷன் ஆகி விட்டனர்.

 இதனால் ஸ்ரேயாவை அழைத்து அவர்கள் கடித்து கொண்டது மட்டுமல்ல, இனி இப்படி செய்ய மாட்டேன். செய்த தவறுக்கு வருந்துகிறேன் என்று எழுதி கேட்டு இருக்கிறார்கள். தலை விதியை நொந்து கொண்ட ஸ்ரேயா, வேறு வழியில்லாமல் பள்ளிக்கூட மாணவி போல மன்னிப்புக் கடிதம்  எழுதி கொடுத்திருக்கிறார். தெலுங்கு பட வட்டாரத்தில் இதுபற்றி பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். ஸ்ரேயா மூத்த வயதானவர் பாத்திரத்தில் நடித்தாலும், சிறந்த நடிப்பில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.நன்றி,வணக்கம்.

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: