Posted by: ramrajya | November 27, 2016

தமிழ்நாடு கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு.எஸ்.வி.ரமணி.

தமிழ்நாடு கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு.எஸ்.வி.ரமணி.

கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்த விழா ஏற்பாட்டாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கோவில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு அளித்ததாகவும், அவற்றை பரிசீலித்து, நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும்படி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், நாமக்கல் மாவட்டத்தில் அடிக்கடி கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி வழக்குகள் தொடரப்படுவதை கவனித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை ஆஜராக உத்தரவிட்டார். மேலும், இதுபற்றி விசாரித்து அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்தார். இதன்படி துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கையும், வீடியோ பதிவையும் தாக்கல் செய்தார். அந்த வீடியோவில், ஆடல் பாடல் என்ற பெயரில் பெண்கள் ஆபாச நடனம் ஆடுவதும், இளைஞர்கள் குடிபோதையில் கும்மாளமிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இதுபோன்ற  கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கும்படி உத்தரவு பிறப்பித்ததற்காக நீதிபதி பி.என்.பிரகாஷ் தன் உத்தரவில் வேதனையும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.  மேலும், சட்டம் ஒழங்கு பிரச்னை தொடர்பாக முடிவெடுக்கும் காவல் துறையினரின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இதுபற்றி அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கோவில் விழாக்கள் நடத்துவதாகக் கூறி பொது இடத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விழா ஏற்பாட்டாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனக் கூறி, ஆறு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தமிழக மக்கள்,கோயில் திருவிழாக்களில், நடன நிகழ்ச்சிகளில் ஆபாசத்தை புகுத்தாமல்,தமிழ் நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் உள்ள கிராமிய நடனங்களையும்,நாடகங்களையும் நடத்தி மக்களிடையே நல்ல பண்பாட்டை பரப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி,வணக்கம். https://youtu.be/ySQ_g3wCevU


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: