Posted by: ramrajya | November 29, 2016

பொதுமக்கள் மோடியின் கறுப்புப் பண ஒழிப்புத் திட்டத்தை ஆதரிக்கின்றார்கள்.எஸ்.வி.ரமணி.

பொதுமக்கள் மோடியின் கறுப்புப் பண ஒழிப்புத் திட்டத்தை ஆதரிக்கின்றார்கள்.எஸ்.வி.ரமணி.

பாகிஸ்தான் போர் தொடுத்தபோது கூட, ஒன்று சேராத எதிர்க்கட்சியினர், தற்போது கறுப்புப்பணத்தை ஒழிக்க, மோடி எடுத்த நடவடிக்கைக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர். அவர்களிடம் கறுப்புப்பணம் அளவிட முடியாத அளவில் குவிந்து கிடக்கலாம். மடியில் கனம் இருப்பதால் ஏற்படும் பயம் இது.புதிய சினிமா டிக்கெட், ‘ புதிய மொபைல் சிம்‘, தீபாவளி இனிப்பு வாங்க என்று பல விஷயங்களுக்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கிறோம்.

கறுப்புப்பணத்தை ஒழிக்க, ஒரு சில நாட்கள், நாம் வரிசையில் காத்திருந்தால் என்ன தவறு? இன்றும் கூட, ரேஷன் கடையில் வரிசையில் நிற்காமல் பொருட்கள் கிடைப்பதில்லை; இதற்காக ஏன் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கவில்லை என்பதை யோசிக்க வேண்டும்.

தீவிரவாத அமைப்புகள் தான், நம்நாட்டு கரன்சிகளை, கள்ளநோட்டுகளாக அச்சடிக்கின்றனர். மேற்கு வங்கத்தில் மால்தாமாவட்டம் வழியாக, கள்ளப்பணம், நாடு முழுக்க கடத்தப்படுகிறது. நமக்குத்தெரியாமல் நாமே கள்ளப்பணத்தை பயன்படுத்தி, மறைமுகமாக தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறோம்.

ஐரோப்பிய நாடுகளில் பணப்பரிமாற்றம் தடைசெய்யப்பட்டுள்ளது. கறுப்புப்பணம் முழுமையாக அழிவதற்கான முதல் நடவடிக்கை இது. ஜி.எஸ்.டி., சரக்குசேவை வரி ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தால் கறுப்புப்பணப்புழக்கம் குறையும். எதிர்க்கட்சிகள் ஒரு வித மாயையை, ஏற்படுத்தவே பந்த்திற்கு அழைப்பு விடுகின்றன. இதனால் மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மோடி அரசின் கறுப்புப்பண ஒழிப்புத்திட்டத்தில் சில சிரமங்கள் நெருக்கடிகள் உள்ளன. அதை சரிக்கட்ட மத்திய அரசு பல்வேறு குழுக்களை களம் இறக்கியுள்ளது. மாநிலம் தோறும் உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள்குழுகண்காணிப்புப் பணிகளை முடுக்கி விட்டு, நிலைமையை சீராக்கி வருகிறது. கோவை மாவட்டத்துக்கு வந்த அதிகாரிகள் குழு, மாவட்ட நிர்வாகத்தோடு பேசி, இப்பிரச்னைக்கு சுமுகமான தீர்வை ஏற்படுத்தியுள்ளது. இனியும் சில நாட்களில் பணப்பரிவர்த்தனை,பணப்பட்டுவாடா ஆகியவை சரியாகிவிடும் என்றுமாவட்டநிர்வாகமும் தெளிவுபடுத்தியுள்ளது. அதனால்,இத்திட்டத்தை எதிர்ப்பதற்கு ஒன்றுமில்லை.

 மென்பொறியாளர், ஒருவர் :கூறும்போது. கள்ளப்பணத்தின் நுழைவு வாயில் மேற்கு வங்கம். அங்கிருந்தே கறுப்புப்பணம் நாடு முழுக்க பரவுகிறது. அதை மறைக்கவும், மலிவான விளம்பரத்தை நாடு முழுக்க தேடுவதற்காகவுமே, பந்த்களை அறிவித்துள்ளார் மம்தா.எதிரும் புதிருமாக இருந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும், கறுப்புப்பண ஒழிப்பு விவகாரத்தில் மோடி எடுத்த நடவடிக்கைக்கு எதிராக திரும்பியுள்ளனர். ஏனென்றால், எதிர்கட்சியினர் அனைவரும் கறுப்புப்பணத்தை அதிக அளவு மறைத்து வைத்திருக்கலாம். கறுப்புப்பணம் ஒழியும் பட்சத்தில், மோடியின் திட்டங்கள் அனைத்துமே ஜொலிக்கும்; தனிநபர் வருவாய் அதிகரிக்கும். மம்தாவின் பந்த், ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. ஜவஹர் சுப்ரமணியன், முதன்மை நிர்வாகி, அறம் இயற்கைபல்பொருள் அங்காடி: கூறும்போது. கறுப்புப்பணத்தை ஒழிக்கும் இத்திட்டம் சரியானது தான். இதை எதிர்க்க எந்த அரசியல் கட்சிக்கும் அருகதையில்லை. நாடு முழுக்க அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் சிறிய அளவில் மாறுதல்களை செய்தால் போதுமானது. ஓரிரு நாட்களில் பிரசனை முடிவுக்கு வந்துவிடும்.

இத்திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பல மாற்று நடவடிக்கைகளை சொல்லி, இணைந்து ஆதரவு தெரிவித்திருக்க வேண்டுமே தவிர, எதிர்ப்பை கிளப்பி இருக்கக்கூடாது. போராட்டத்திலும், எதிர்ப்பிலும் இறங்குவதற்கு சரியான நேரம் இதுவல்ல. ஏனென்றால், தீவிரவாதிகளின் பிடியில் போலி ரூபாய் நோட்டுகள் உள்ளன. அவை புழக்கத்திலும் உள்ளன. இது தவிர கறுப்புப்பணமும் அவர்களிடம் உள்ளன.அதை ஒழிப்பதற்கு இந்தியராக இருந்து அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதன் வாயிலாக பிரிவினை வாதத்திற்கு முடிவை ஏற்படுத்தலாம். இப்பிரச்னையை அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் தேடக்கூடாது. இதை அரசியலாக்காமல், பந்த் உள்ளிட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இறங்காமல் தேச நலன் கருதி, மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். நன்றி,வணக்கம். https://youtu.be/3RcCkGnarFk


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: