நரேந்திர மோடியின் கருப்புப்பண ஒழிப்பை மற்றொரு சுதந்திரப் போராட்டமாக மக்கள் நினைக்கின்றார்கள். எஸ்.வி.ரமணி.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கிறார்கள்; பதிலுக்கு மக்கள் தேர்தல்களில் பாஜகவை ஜெயிக்க வைக்கிறார்கள் என்று பாஜக தலைவர் அமித் ஷா கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநில இடைத் தேர்தல்களிலும், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றது.
இந்தச் சூழலில், உத்தரப்பிரதேச மாநிலம், மகராஜ்கஞ்ச் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய முழு அழைப்புக்கும், “மக்கள் சீற்றப்‘ பேரணிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றன.
ஆனால், தேர்தல்களில் பாஜக இதுவரை இல்லாத அளவு வெற்றிகளைக் குவித்து வருகிறது.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொதுமக்கள் பாஜகவின் பக்கம் இருப்பதை இது உணர்த்துகிறது.
ஏழை மக்கள் யாரிடமும் கருப்புப் பணம் இல்லை. ராகுல், அகிலேஷ், மாயாவதி போன்றவர்களிடம்தான் கருப்புப் பணம் உள்ளது.
தற்போது அவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அந்தப் பணத்தை அவர்கள் பறிகொடுத்துவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
அதனால்தான் சமாஜவாதி கட்சியினர், பகுஜன் சமாஜ் கட்சியினர், காங்கிரஸார், மம்தா, அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் பிரதமரின் மீது கடுங்கோபத்தில் உள்ளனர் என்றார் அவர்.
நம்முடைய கருத்து,மம்தா என்னதான் பேரணி நடத்தினாலும்,அவருடன் கூட்டணி வைத்து போராட்டம் நடத்துபவர்கள் ஏராளமான கறுப்புப் பணத்தைமறைத்து வைத்திருக்கின்றார்கள் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். மம்தா ஏன் பதற வேண்டும்?நரேந்திர மோடியின் கருப்புப்பண ஒழிப்பை மற்றொரு சுதந்திரப் போராட்டமாக மக்கள் நினைக்கின்றார்கள்..நன்றி,வணக்கம்.
Leave a Reply