Posted by: ramrajya | December 23, 2016

புதிய தலைமைச்செயலர் கிரிஜா மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் கிடையாது.எஸ்.வி.ரமணி.

புதிய தலைமைச்செயலர் கிரிஜா மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் கிடையாது.எஸ்.வி.ரமணி.

பத்திரிகை செய்திகள்.

கிரிஜா வைத்தியநாதன் மகன் திருமணத்தில் கருணாநிதி பங்கேற்று உள்ளார். எஸ்.வி.சேகர் சகோதரர் மனைவி! தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகரின் உறவுக்கார பெண்மணியாகும். சென்னை: தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், தமிழக பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகரின் சகோதரர் மனைவியாகும். கிரிஜா வைத்தியநாதன் மகன் திருமணத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்றுள்ளார். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் 45 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அப்பதவிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ராம மோகன் ராவ் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு இந்த அதிரடி முடிவுக்கு காரணமாம். இந்நிலையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், தமிழக பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகரின் சகோதரர் மனைவி என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு மத்திய பாஜக அரசு மறைமுகமாக தனது அதிகாரத்தை தமிழகத்தில் பயன்படுத்த கிரிஜா வைத்தியநாதனை தலைமைச் செயலராக பதவியில் அமர்த்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. தகுதியானவர் இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத்திலான மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அவர்களோ வேறு மாதிரி சொல்கிறார்கள். உண்மையிலேயே கிரிஜா வைத்தியநாதன் இந்த பதவிக்கு தகுதியானவர். 1981ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அவர்தான் சீனியர் என்கிறார்கள். பதவி நியமிப்பில் அரசியல் சீனியராக இருந்தாலும், சில, பல காரணங்களால் அவருக்கு பிறகு பதவிக்கு வந்தவர்களுக்கு தலைமைச் செயலர் பதவி வழங்கப்பட்டு வந்தது. இப்போதுதான் சீனியருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் கிரிஜா மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் வந்தது கிடையாது. திறமையான அதிகாரி. பன்னீர்செல்வம் அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, என்று தெரிவிக்கிறார்கள்.

இன்னொரு தகவல் என்னவென்றால், கடந்த திமுக ஆட்சி காலத்தில் கிரிஜா வைத்தியநாதன் மகனுக்கு சென்னையில் திருமணம் நடந்தது. எஸ்.வி.சேகர்தான் திருமண ஏற்பாடுகளை கவனித்தார். திருமணத்திற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி வந்திருந்தார். திமுக இதழான முரசொலியில் முதல் பக்கத்தில் இந்த படம் பெரிதாக வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுக- அதிமுக முத்திரை முற்றிலும் இல்லாத முதல் தலைமைச் செயலாளர்..கிரிஜா அவர்கள்.அவர் தமிழக மக்களின் குறைகளை தீர்த்து வைப்பார் என அனைத்துதரப்பு மக்களும் எதிர் பார்க்கிறார்கள். நன்றி,வணக்கம்.
https://youtu.be/XGsKcMoJp9o

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: