Posted by: ramrajya | December 26, 2016

அம்மா அடை யாளம் காட்டிய, பன்னீர்செல்வமே தலைமை தாங்கி, கட்சியை வழி நடத்த வேண்டும்.எஸ்.வி.ரமணி.

அம்மா அடை யாளம் காட்டிய, பன்னீர்செல்வமே தலைமை தாங்கி, கட்சியை வழி நடத்த வேண்டும்.எஸ்.வி.ரமணி.

பத்திரிகை செய்திகள்.

அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா முயற்சித்து வரும் நிலையில், அவரது எதிர்ப்பாளர்கள், கட்சியில் புது, ‘ரூட்போடுகின்றனர். முதல்வர் பன்னீர் செல்வத்தையே, பொதுச் செயலராக்க வேண்டும் என, அவர்கள் ஆதரவு கொடி தூக்கி உள்ளனர்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவி காலியானது. அப்பதவியில், சசிகலாவை அமர ,வைக்க, அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு, அமைச்சர்கள் உள்ளிட்ட, மேல்மட்ட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர் கள் மத்தியில், கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர்கள், தனிப்பாதையில் செல்லதிட்டமிடுகின்றனர்.’முதல்வராகஉள்ள பன்னீர்செல்வத்தையே, பொதுச்செயலராக தேர்வு செய்வோம்’ என, பேசத்துவங்கிஉள்ளனர்.

மத்திய அரசும், பொதுச்செயலர் பதவிக்கு, முதல் வர் பன்னீர்செல்வம் வருவதை விரும்புவதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, முதல்வருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அதன் வெளிப்பாடாக, பன்னீர் செல்வத்திற்கு ஆதர வாக, பேனர்கள்வைக்க துவங்கி உள்ளனர்.

விழுப்புரம்மாவட்டம், அவலூர்பேட்டை கடை வீதியில், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து, நகர அ.தி.மு.க., செயலர், சாதிக்பாஷாபேனர்வைத்துள்ளார். 

அதில், ‘எம்.ஜி.ஆர்., வழியில், அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்ற ஜெ., தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக, மாற்றிக் காட்டினார்; ஜெ., அடை யாளம் காட்டிய, பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, கட்சியை வழிநடத்த வேண்டும்’ என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம் கல்விபயின்றதானால் ‘அறிவாளிகள்’ ஆகிவிட்டோம் என்ற கூற்றினை ஓரளவுதான் ஏற்கமுடியும். பிறப்பின்போது பெற்ற சில திறமைகளை, சமுதாயத்தில் உறவாடுதல்மூலம் நம் அறிவு பெருகுகிறது, நாம் கடந்துசெல்லும் பாதை, நாம் உறவாடும் மனிதர்களின் ‘தனி முத்திரை’ நம்முடன் ஐக்கியம் ஆகிவிடுகிறது. காமராஜர் அவர்களின் ஆட்சிமை போற்றப்படுவதற்கு அவரின் கல்வித்தகுதியா துணை நின்றது? மக்களில் ஒருவனாக, அவர்களின் இன்பத்திலும், துயரத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு அவர்கள் உயர்வுக்கு பாடுபட்ட மேதைகளில் அவரும் முதன்மை பெறுகிறார், ‘பார்க்கலாம்’ என்று ‘அவர் சொல்லிய சொல்லன்றோ’ செயலாக்கம் பெற்றதை காணமுடிந்தது, ஒரு வார்த்தை வாயிலிருந்துவருமுன் பலமுறை சிந்திப்பது, பலரின் கருத்துக்களுக்கு, அது எதிரானதாக இருந்தாலும், செவிமடுப்பது என்ற நற்குணங்கள் எல்லாம், பன்னீர்செல்வம் வாயிலாக மற்றுமொரு ‘காமராஜர்’ உருவாக வாய்ப்புக்கள் ஏராளம்.பன்னீர் செவத்தின் மூலம் மற்றும் ஒரு காமராஜர் தமிழகத்தில் உருவானால் அதை தமிழக மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள். நன்றி,வணக்கம். https://youtu.be/RQfeyyD2be0

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: