Posted by: ramrajya | December 26, 2016

கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான அரசின் போர் ரேடியோ உரையில் மோடி.

கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான அரசின் போர் ரேடியோ உரையில் மோடி.

கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராக அரசு நடத்தி வரும் மிகப் பெரிய போருக்கு மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர்; இவற்றை ஒழிக்கும் வரை, இந்தப் போர் தொடரும். மக்கள் தரும் தகவலின் அடிப்படையி லேயே, வருமான வரித்துறையின் வேட்டை நடக்கிறது,” என, ‘மன் கி பாத்ரேடியோ உரை யில், பிரதமர் மோடி, திட்டவட்டமாக தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, மாதத்துக்கு ஒரு முறை, ஞாயிற்றுகிழமையில், ‘மன் கி பாத்என்ற ரேடியோ உரை நிகழ்த்துகிறார்;நேற்று25-12-2016அவரபேசியதாவது:

கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராக எடுக்கப் பட்டுள்ள செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், ஒரு துவக்கமே; இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்; இந்தப் போரை நிறுத்துவது என்ற 
கேள்விக்கே இடமில்லை.கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள இந்தப் போருக்கு, மக்கள் ஏகோபித்த ஆதரவு அளிக்கின்றனர். 

தற்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில், கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது; பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்; பல பெருந்தலைகள் சிக்கி வருகின்றன.இதுபோன்ற நடவடிக்கைகள், அரசால் மட்டும் எடுக்கப்படவில்லை. 

கறுப்புப் பணம், ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள, விரக்தி அடைந்த, அவற்றை ஒழிக்க வேண்டும்என்று உறுதி எடுத்துள்ள சாதாரண மக்களும் களத்தில் இறங்கி உள்ளனர். இது தொடர்பான தக வல்களை அளித்து வருகின்றனர். அதன் அடிப்படை யிலேயே 

நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் இந்த ஆதரவு, நம்பிக் கைக்கு ஏற்ப, கறுப் புப் பணம், ஊழலை ஒழிக் கும் வரை, அவற்றுக்குஎதிரானபோர்நடக்கும். 

தொடர்ந்து, அரசின் இணையதளம், ‘மொபைல் ஆப்போன்றவற்றில், இதுபோன்ற தகவல்களை அளிக்க லாம். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, தினமும் பல்வேறு அறிவிப்புகள், கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

அரசு ஒரு நடவடிக்கை எடுத்தால், அதையும் சமாளித்து, எப்படி ஏமாற்றலாம் என, கறுப்புப் பண முதலைகள் முயற்சித்து வருகின்றன.

எதிரி எடுக்கும் நடவடிக்கைக்கு ஏற்ப, நம் போர் வியூகத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்; அந்த வகையில் தான், பல்வேறு கட்டுப்பாடுகளும், புதிய புதிய அறிவிப்புகளும் வெளியிடப்படுகின்றன. 

செல் லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், அரசியல் கட்சி களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; அவை தொடர்ந்து, பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருவதாக சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். அரசியல் மற்றும் தேர்தலில், கறுப்புப் பண புழக்கம் இருக்கக் கூடாது என்பது குறித்து பார்லிமென்ட்டில் விவா திக்க விரும்பினோம். ஆனால், அதுநடக்கவில்லை.

ரொக்கப் பயன்பாட்டை தவிர்த்து, ‘டிஜிட்டல்பயன் பாட்டை ஊக்குவித்து வருகிறோம்.அதன்படி, டிஜிட் டல் பரிவர்த்தனை செய்பவர் களுக்கும், வர்த்தகர் களுக்கும், நாள்தோறும், 15 ஆயிரம் பரிசுகள் அளிக் கும் இரண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தொடர்ந்து, 100 நாட் களுக்கு நடக்க உள்ள இந்த குலுக்கல் முறை யிலான பரிசு திட்டம், இன்று முதல் துவங்குகிறது. இவ்வாறு அவர்உரையாற்றினார்.

ரேடியோ உரையில், பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியதாவது:பினாமிதடைச்,1988ல் கொண்டு வரப்பட்டாலும், இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை; இதில் திருத்தம் செய்து, பினாமிசொத்துபறிமுதல் சட்டம்சமீபத்தில்கொண்டுவரப்பட்டுள்ளது. 

இது மிக விரையில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. நாட்டு மக்களின் நலனுக்காக, இந்த திட் டத்தின் படி, பினாமி பெயரில் சொத்து குவித் தால், அவை பறிமுதல் செய்யப்படும். பார்லி மென்ட் குளிர்கால கூட்ட தொடர் முடங்கினாலும், மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டதற்காக, பாராட்டு தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மோடி அவர்களின் கறுப்பு பண ஒழிப்பு திட்டங்களை ஆதரிக்க வேண்டியது,நம் அனைவரின் கடமையாகும்.நன்றி,வணக்கம். https://youtu.be/euMHONXgd4s

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: