Posted by: ramrajya | December 29, 2016

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.எஸ்.வி.ரமணி

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.எஸ்.வி.ரமணி

சென்னை வானகரத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் அதிமுக பொதுக்குழு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் சசிகலா தலைமையில் பணியாற்றுவோம் என அதிமுக பொதுக்குழுவில் ஓருமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.

தீர்மானத்தை கண்ணீர் மல்க ஏற்றுக் கொண்ட சசிகலா பொதுச்செயலாளர் பதவியை ஏற்பதாக சம்மதம் தெரிவித்துள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக அலுவலகத்துக்கு வந்து விரைவில் சசிகலா கட்சி பணியாற்றுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் இது. மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 3000 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் கூட்டத்தில் ஜெயலலிதாவின் புகைபடத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் முதல் தீர்மானமாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜெயலலிதா உடல் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.சசிகலா தலைமையில் பணியாற்றுவோம் என அதிமுக பொதுக்குழுவில் ஓருமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
2.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம்
3. சசிகலாவின் தலைமையின் கீழ் பணியாற்றுவோம் 
4.எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் 
5.ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்க தீர்மானம்
6.ஜெயலலிதா உடல் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்
7.ஜெயலலிதாவின் தியாகங்களுக்கு வீர வணக்கம் 
8. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி தீர்மானம்
9. அதிமுகவை வழிநடத்த பொதுச்செயலாளர் நியமனத்திற்கு ஒப்புதல் தெரிவித்து தீர்மானம்
10.ஜெயலலிதாவிற்கு மகசேச விருது வழங்க தீர்மானம்
11. ஜெயலலிதாவிற்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க தீர்மானம்
12. ஜெயலலிதா இறுதி சடங்கில் பங்கேற்ற குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
13.ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய திரைத்துறையினருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நன்றி,வணக்கம். https://www.youtube.com/watch?v=EVYSGl-22FE

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: