Posted by: ramrajya | January 1, 2017

முதல்வர் பதவியில் இருப்பதை மறந்து, பன்னீர் செல்வம் சசிகலா காலில் விழலாமா?எஸ்.வி.ரமணி.

முதல்வர் பதவியில் இருப்பதை மறந்து, பன்னீர் செல்வம் சசிகலா காலில் விழலாமா?எஸ்.வி.ரமணி.

பத்திரிகை செய்திகள்.

பொதுச்செயலாளராகபதவியேற்றபின்னர்கட்சி தொண்டர்களிடையே உரையாற்றிய சசிகலா தன்னுடைய உரையை முடித்துவிட்டு திரும்பும் போது அவரது காலில் தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் விழுந்தார்.முதல்வர் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து மற்ற மூத்த தலைவர்களும் சசிகலாவின் காலில் விழத் தயாராக இருந்தனர். ஆனால் சசிகலா பன்னீர்செல்வம் காலில் விழுந்ததும் இப்படி காலில் விழ வேண்டாம் என அதனை தடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா காலில் விழுந்து வணங்கியது, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை காணும் போதெல்லாம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகி கள், அவரது காலில் விழுந்து வணங்குவர். எதிர்க்கட்சியினர் கிண்டலடித் தாலும், காலில் விழும் பழக்கத்தை, அ.தி.மு.க.,வினர் கைவிடவில்லை. ஜெ., மறைவைஅடுத்து,பன்னீர்செல்வம்முதல்வரானார்.பொதுசெயலர்பதவிக்கு அவர் போட்டியிடுவார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர்;

ஆனால், அவர் சசிகலாவை முன்னிறுத்தினார். மற்ற அமைச்சர்களும், சசிகலாவை ஆதரித்தனர். சசிகலா பொதுச் செயலராக நியமிக்கப்பட்டு, நேற்று கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

நிர்வாகிகள் இடையே, சசிகலா பேசி முடித்ததும், ஜெ., காலில் விழுவது போல், முதல்வர் பன்னீர் செல்வம், சசிகலா காலில் விழுந்து வணங்கினார்; சசிகலா அவரை கண்டித்தார். பன்னீர்செல்வத்தின் செயல், மற்ற அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிக ளிடம், கடும் கோபத்தை ஏற்படுத்திஉள்ளது.

இது குறித்து, அமைச்சர்கள் சிலர் கூறியதாவது:

ஜெ., காலில் விழுந்தது போல, சசிகலா காலில் விழக்கூடாது என, நினைத்திருந்தோம். ஆனால், அனைவருக்கும் வழிகாட்ட வேண்டிய பன்னீர்செல்வம், முதல்வர் பதவியில் இருப்பதை மறந்து, சசிகலா காலில் விழுந்தது, எங்களை அதிர்ச்சியடைய வைத்தது.அவர் விழுந்தால், மற்றவர்களும் விழ வேண்டிய கட்டாயம் ஏற்படும். பன்னீர்செல்வம் காலில் விழுந்ததை, சசிகலா கண்டித்தார். எனவே, நாங்கள் காலில் விழ வேண்டிய கட்டாயம் ஏற்படாது என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது பற்றி பொது மக்கள்தான் கருத்து தெரிவிக்க வேண்டும்.நன்றி,வணக்கம்.

https://youtu.be/-5ueAwyCGEc

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: