Posted by: ramrajya | January 19, 2017

ரஜினி அரசியலுக்கு வருவதில் சரத்குமாருக்கு என்ன சங்கடம்?.எஸ்.வி.ரமணி.

 

ரஜினி அரசியலுக்கு வருவதில் சரத்குமாருக்கு என்ன சங்கடம்?.எஸ்.வி.ரமணி.

 தமிழகம் முழுவதும் உள்ள ரஜனியின் ரசிகர்கள்,அவர் அரசியலுக்கு வரவேண்டுன் என வேண்டுக்கோள் விடுத்து வருகின்றனர்.தமிழக அரசியலில் அசாதரண சூழ்நிலை நிலவுகிறது என்று துக்ளக் ஆண்டு விழாவில் அவர் பேசிய பேச்சு ஒரு சிலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.ஆனால் காமராஜர் மறைவுக்குப்பின் அறிஞர் அண்ணா அரசியலுக்கு வந்து முதல்வர் ஆனார்.அவருக்குப்பின் எம்.ஜி.ஆரும்,அதற்கு பின் ஜெயலலிதா அவர்களும் மக்களின் பேராதரவைப் பெற்று முதல்வர் ஆனார்கள்.ஒருவரின் வெற்றியை மற்றவர்களால் தடுக்க முடியாது என்பது அனுபவ பூர்வமான உண்மை.

 ரஜினி கூறியமடி ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப்பின் இன்று தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை உருவாகி உள்ளது என்பதே அனைத்து தரப்பினரின் கருத்து. இதில் யாரும் வருத்தமோ,வேதனையோ படத் தேவை இல்லை.ஜெயலலிதா அவர்களின் ஆர்.கே.நகர் தொகுதியிலே யார் வேண்டுமாளாலும்,தேர்தலுக்கு நிற்கலாம். அங்கு வெற்றி காண்பவர்களே மக்களின் ஆதரவைப் பெற்றவர்களாக கருதி,அவர்களின் சட்டமன்ற பெரும் பான்மையை நிரூபிக்கச்சொல்லி, முதல்வர் பதவியில் அமர்த்தலாம். மீண்டும் பொதுத்தேர்தல் நடத்துவது என்பது தற்போது நடை பெறாத காரியம்.

 ரஜினியின் கருத்துக்கு எவரும் மறுப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை..நீயா?நானா?போட்டுப்பாரடா எதிர நீச்சல் என்ற படப் பாடலின்படி, இடைத் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப் படையாக சரத் குமாரோ யார் வேண்டுமானாலும் தேரிந்து கொள்ளலாம்.இதில் ரஜினி வெற்றி வாகை சூடினால் அவர்தாம் முதல்வர் என்பது மறுக்கமுடியாத உண்மை. ரஜினியும்.சரத் குமாரும் அரசியலுக்கு வருவதை மக்கள் வரவேற்கத்தான் செய்வார்கள்.இதில் ஒருவருக்கு ஒருவர் கருத்து வேற்றுமை வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.

 வெற்றி காண்பவரே மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள்.நன்றி,வணக்கம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: