Posted by: ramrajya | January 22, 2017

இளைஞர்களே,மாணவக் கண்மணிகளே போராட்டத்தை கைவிட்டு,நீதிபதி கட்ஜு,முதல்வரின் உறுதி மொழியைக் கேளுங்கள்.

இளைஞர்களே,மாணவக் கண்மணிகளே போராட்டத்தை கைவிட்டு,நீதிபதி கட்ஜு,முதல்வரின் உறுதி மொழியைக் கேளுங்கள்.

 ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுமாயின் அது நிரந்தரத் தீர்வாக அமையும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

 ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவர உரிமை உள்ளது என்று தொடக்கம் முதலே கூறி வந்தவர் மார்க்கண்டேய கட்ஜூ. தமிழக மக்களின் இந்த வெற்றிக்காக மனதார மகிழ்ச்சி கொள்வதாகவும், தமிழர் வாழ்க என்றும் கட்ஜூ தனது பதிவில் கூறியுள்ளார். இந்த அவசரச் சட்டம் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்று நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ள கட்ஜூ இந்த சட்டத்துக்கு தமிழக சட்டப்பேரவை ஒப்புதல் அளிக்குமாயின், அது நிரந்தர சட்டமாகும் என்று தெரிவித்துள்ளார்.

 ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து ஆதரவு குரல் எழுப்பி வரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ நானும் தமிழன் என்று பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மக்கள் முன்வரவேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

 

ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதால் அலங்காநல்லூரிலும்,மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் இன்று 22-1-17 ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க இந்த அவசர சட்டம் தான் நிரந்தர தீர்வாக அமையும். அதற்காக 23ம் தேதி கூடும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே, சட்ட மசோதா நிறைவேற்றப் படும் என, முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி தெரிவித்தார்.

 அவர் கூறியதாவது:தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க, பாரம் பரிய உரிமையான ஜல்லிக்கட்டு நடத்துவதற் குரிய தடை முழுமையாக, தமிழக அரசின் அவசர சட்டத்தின்படி நீக்கப்பட்டிருக்கிறது. நாளை, 23ம் தேதி துவங்க உள்ள சட்டசபை கூட்டத் தொடரில், அதற்கான சட்ட முன்வடிவு வரைவு கொண்டு வரப்பட்டு, முழுமையான சட்டமாக நிறைவேற்றப்படும்.

 இந்த அவசர சட்டமானது ஆறு மாத காலத்திற்கு உறுதியாக நடைமுறையில் இருக்கும்.அதற்குள் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட வேண்டும். காலதாமதம் செய்யாமல், வரும் சட்ட சபை கூட்டத் தொடரிலேயே உரிய சட்டம் உருவாக்க உள்ளோம். அதனால் ஜல்லிக் கட்டுக்கு மீண்டும் தடை ஏற்படும் என்ற சந்தேகம் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

 முன்னாள் நீதிபதி,தமிழக முதல்வர் உறுதி மொழியில் நம்பிக்கை வைத்து,மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் வாதிகளின் வலையில் சிக்காமல் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை சிறப்பாகக் கொண்டாட  வேண்டும்.

நன்றி,வணக்கம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: