Posted by: ramrajya | January 23, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பும மத,தேச விரோதிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். எஸ்.வி.ரமணி.

 

ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பும மத,தேச  விரோதிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். எஸ்.வி.ரமணி.

 போராட்டத்தில் இருந்து விலகிய  இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாஆதி பேஸ்புக்கில் பரபரப்பு குற்றச்சாட்டைக் கேளுங்கள்.

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாஆதி ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து பேசி பரபரப்பு வீடியோ ஒன்றை தனது பேஸ்புக்பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

 ஜல்லிக்கட்டு தடையை நீக்க பல வருடங்களாக போராட்டங்கள் நடக்கிறது. நானும் மாடுகள் வைத்திருக்கிறேன். எனவே ஜல்லிக்கட்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த டக்கரு… டக்கரு…என்ற பாடல் வீடியோவை தயார் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து அலங்காநல்லூர், சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் எழுச்சியை காணமுடிகிறது. நான் கோவையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றேன். அங்கு மாணவர்கள், குழந்தைகள், பெற்றோர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என்று பலரும் இருந்தனர்.

 காலையில் இருந்து அமைதியாக சென்ற அந்த ஆர்ப்பாட்டத்துக்குள் மாலையில் திடீரென்று கருப்பு சட்டை அணிந்த 10 பேர் நுழைந்தனர். அவர்கள் மத்திய அரசு தங்களை வஞ்சித்து விட்டதாக கோ‌ஷம் எழுப்பி தேசிய கொடியை மிதித்தனர். இன்னும் சிலர் இந்துமுஸ்லிம் மோதலை உருவாக்கும் விதத்தில் பேசினார்கள். நரேந்திர மோடி இந்துத்துவாவை திணிக்கிறார் என்று இன்னும் சிலர் ஆவேசப்பட்டனர். ஒருவர் எனது படத்துடன் பேனரை எடுத்துவந்து கெட்ட வார்த்தைகளால் பீட்டாவை திட்டினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 குடும்பம் குடும்பமாக மக்கள் இருக்கிறார்கள். மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் இப்படி பேசுகிறார்களே… ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்புகிறார்களே… என்று பயந்தேன். மனது புண்பட்டது. எங்கிருந்தோ தனித்தனி குழுக்களாக அவர்கள் வந்தனர். சிலர் தனி தமிழ்நாடு வேண்டும்என்று கோ‌ஷமிட்டனர். ஒருவர் ‘‘வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்யாவிட்டால் நான் செத்துவிடுவேன்’’, என்று மிரட்டல் விடுத்தார்.

 மாணவர்களும், பெரியவர்களும் சரியாக இந்த போராட்டத்தை கொண்டு செல்கின்றனர். ஆனால் சிலர் உள்ளே புகுந்து அதில் வி‌ஷ விதைகள் தூவுகிறார்கள். அத்துடன் எனது படத்தையும் 5 நடிகர்கள் படங்களையும் போட்ட துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு ஆட்சியை பிடிப்போம் நீங்கள் மந்திரிகள் என்றனர். போராட்டத்தில் அரசியல் சாயம் பூசுவதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 நான் அரசியல்வாதி இல்லை. ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற ஒரே பிரச்சினைக்காக தான் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டேன். ஆனால் போராட்டத்தில் தேச விரோத கருத்துகளை பேசுவதும், வன்முறையை தூண்டுவதும் எனக்கு பிடிக்கவில்லை. எனவே அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். என்னை போலீஸ் பிடித்து போய்விட்டதாகவும் சமூக வலைதளத்தில் வதந்தி பரப்புகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். அதற்காக 10 வருடங்களாக போராடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை கேட்போம். நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட ஜல்லிக்கட்டு வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுப்பேன்.’’  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாஆதி ஜல்லிக்கட்டு பற்றி கூறியதை இளைஞர்களே நீங்களும் கேட்டு,உங்கள் பலத்தை வைத்து அரசியல் நடத்த நினைக்கும் ஓநாய்கள் வலையில் விழுந்து விடாதீர்கள். இலட்சோப, இலட்சம், இளைஞ்சர்களால் ஜல்லிக்கட்டுக்கு விடிவுகாலம் பிறந்து விட்டது. உங்கள் வெற்றி மகத்தானது,அதில் மற்றவர்கள் உறவாட இடம் கொடுத்து விடாதீர்கள். போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவக்கண்மணிகளுக்கும், இளைஞ்சர் பட்டாளத்தையும் இரு கரம் கூப்பி வணங்குகின்றேன்.நன்றி,வணக்கம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: