Posted by: ramrajya | January 28, 2017

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின் லேடன் படத்துடன் வலம் வந்தார்கள் யார்?

 

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின் லேடன் படத்துடன் வலம் வந்தார்கள் யார்?

பத்திரிகை செய்திகள்.

சென்னை: மெரினா போராட்டத்தில் சர்வதேச தீவிரவாதி பின்லேடன் படத்துடன் வலம் வந்தது யார் என்பதில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. மெரினா போராட்டத்தின் போது காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளை பேசினார்கள்; பின்லேடன் படத்துடன் வலம் வந்தனர்; ஆகையால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நேரிட்டது என சட்டசபையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இது தொடர்பான புகைப்படங்களையும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். தற்போது பின்லேடன் படத்துடன் வந்தது யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிற தகவல் படுவேகமாக வைரலாக பரவி வருகிறது. அதில் சர்ச்சைக்குரிய வண்டி எண்:TN05 BC 3957; இந்த எண்ணின் உரிமையாளர் யார் என்பது குறித்து அறிய அரசின் VAHAN TN05BC3957 என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாமும் அந்த படத்தில் உள்ள வண்டி எண்ணின் உரிமையாளரை அறிய வண்டி எண்: TN05 BC 3957 குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பினோம். நமக்கு கிடைத்த பதில் இதுதான்:

Friday.27 Jannuary 2017.

TN05 BC 3957 RTO Chennai North

Owner Raji.S.

VECHICLE> HONDA DIO {PETROL} SCOOTER/MOPED

RC/FC EXPIRY o4-NOV 30 FINANCE. K.DHARSHAN KOTHARI.

MV TAX up to Life Time. COURTESY>MORTH NIC

 இதே போன்று போலீஸ் காவலர் தீபா என்பவர்  ஐஸ் ஹவுஸ் காவல் நிலயததில் மானபங்கம செய்யப்பட்டதையும் கூறி உள்ளார். நான் போராட்டம் நடத்தியவர்களால் எரியும் காவல் நிலையத்தில் மானபங்கப் படுத்தப் பட்டேன் என்று கண்ணீர் மல்கக் கூறி உள்ளார். போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் இது குறித்து தீவிர விசாரணை செய்யச்சொல்லி உள்ளார். .

 மாணவர் போராட்டத்தில்,ஜல்லிக்கட்டு போராட்டம் என்ற பெயரில்,தரமற்ற செயல்களை மாணவர்கள் நிச்சயம் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே மாணவக் கண்மணிகளே நியாயமான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நீங்கள் ஈடுபடும் போது, உங்கள் பெயரை கெடுக்க நினைக்கும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள்,உங்கள் போராட்டத்தின் பலனை அனுபவிக்க வழி காட்டியாக இருந்து விடாதீர்கள்.சமூக விரோதிகளை அடித்து விரட்டி விடுங்கள்.நன்றி,வணக்கம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: