Posted by: ramrajya | February 3, 2017

தி.மு.க. ஐந்து ஆண்டுகளுக்கு ஓ.பி.எஸுக்கு ஆதரவு தரும். துரைமுருகன் பேச்சு.எஸ்.வி.ரமணி.

தி.மு.க. ஐந்து ஆண்டுகளுக்கு ஓ.பி.எஸுக்கு ஆதரவு தரும். துரைமுருகன் பேச்சு.எஸ்.வி.ரமணி.

பத்திரிகை செய்திகள்.

 உங்கள் ஆட்சி முடியும் வரை நீங்களே முதல்வராக தொடர வேண்டும். அதற்கு திமுக ஆதரவு தரும் என திமுக துணைத்தலைவர் துரைமுருகன் பேசியது, சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

நேற்று சட்ட சபை கூட்டத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.

 பள்ளிக்குழந்தை போல் கைகளைக் கட்டிக் கொண்டு பவ்வியமாக பேசிய திமுக எம்.ல்.ஏ. புகழேந்தியை பார்த்து, பணிவுக்கே பணிவு காட்டும் என்னையே நீங்கள் மிஞ்சி விட்டீர்கள் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது.

 அதேபோல், ஓ.பி.எஸ் பேசும் போது, அதிமுக அரசு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளது. ஆனால், எதிர்கட்சி தலைவருக்கு அதை பாராட்ட மனம் வரவில்லை எனக்கூறினர். உடனே எழுந்து பேசிய துரை முருகன் நான் உங்களை மனமாற பாராட்டுகிறேன். வரும் 5 ஆண்டுகளுக்கும் நீங்களே முதல்வராக இருக்க வேண்டும். உங்களுக்கு பின்னால் இருக்கும் சக்தியை பார்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருவோம்எனக்கூறினார்.

 இதுகேட்டு திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்ததை பார்க்க முடிந்தது.

 இதனிடையே அதிமுக-வில் இணைவேன் என்று டி. ராஜேந்தர் பேட்டி அளித்துள்ளார்.

 அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தால் அக்கட்சியில் இணைவது குறித்து முடிவு செய்வேன் என்றார் லட்சிய திமுக நிறுவனத் தலைவரும், திரைப்பட இயக்குனருமான டி. ராஜேந்தர்.அவர்கள் கூறி உள்ளார்,.

 ஒ.பி.எஸ் அவர்களுக்கு பெருகும் ஆதரவைக்கண்டு அதிமுகவினர் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லை.பணிவு நிறைந்த முதல்வர் ஒ.பி.எஸ்.

அவர்களை நாமும் பாராட்டுவோம். நன்றி,வணக்கம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: