Posted by: ramrajya | February 6, 2017

சசிகலா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளபோது எப்படி முதல்வராக பதவி ஏற்கமுடியும்? பிரதமர் மோடி சிந்திக்கவேண்டும்.

சசிகலா  மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளபோது எப்படி முதல்வராக பதவி ஏற்கமுடியும்? பிரதமர் மோடி சிந்திக்கவேண்டும்.

 சசிகலா பொறுப்பேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 அ.தி.மு.க.,வின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, தமிழக முதல்வராக வரும் 7 அல்லது 9ம் தேதி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சசிகலா புஷ்பா, பிரதமர் மோடி மற்றும் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ்வுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

 அ.தி.மு.க., பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, அ.தி.மு.க.,வின் சட்டசபை குழு தலைவராகவும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அவர் அடிப்படையில் எந்த கட்சி பணியும் செய்தது கிடையாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்ற போதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், தற்காலிக முதல்வராக அவர் நியமிக்கப்பட்டதில்லை.

 சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்றால், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பிரதமர், கவர்னர் தலையிட்டு சசிகலா முதல்வர் பதவியில் அமர்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சசிகலா அ.தி.மு.க., பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 இதைப்போல் டுவிட்டர் வலைதளத்தில் பொது மக்கள் கீழ் கண்டவாறு விமர்சனம் செய்துள்ளனர்.

 1.ஒ.பி.எஸ்.பேரூந்தில் பெண்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணியைப்போல்,எந்த பெண்கள் வந்தாலும் எழுந்து நின்று தன இருக்கையை அவர்களுக்கு அளிக்கிறார்.

 

2.தமிழக முதல்வர் பதவிக்கு வருபவர் கால் ஆண்டு,அரையாண்டு,முழு ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவரா?

 3.உலகப் புகழ் பெற்ற மேதைகளை முதல்வராக பெற்றிருந்த தமிழ் நாட்டிற்கு இப்படி ஒரு நிலையா?

 4.சசிகலா மக்களால் தேர்ந்தெடுக்கப் படவில்லை,ஒரு தேர்தலில் கூட அவர் நின்றது கிடையாது.

5.சசிகலா முதல்வராக பதவி ஏற்பது தவறான யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்ற  முன் உதாரணத்தை உண்டாக்கும். ஒ.பி.எஸ் போன்றவர்களை தவறாக நினைக்கும்.

 6.சசிகலா பதவி ஏற்பதை எதிர்க்காவிட்டாலும்,அவர் குறுக்கு வழியில் பதவி  ஏற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 7.தமிழ்நாடு அரசில் யார் வேண்டுமானாலும் முதல்வராக பதவி ஏற்கலாம் போல் உள்ளது.

 8.ஏ…கடவுளே தமிழ் நாட்டுக்கு புயல்,சுனாமி,வெள்ளத்தை,சூறாவளிக் காற்றையும் அனுப்பினாய்,ஏன் தற்போதைய நிலையை உருவாக்கினாய்?

 பிரதமர் மோடி அவர்கள் சிந்தித்து தமிழ் நாட்டு மக்களுக்கு நல்ல முடிவைத் தரவேண்டும்.நன்றி,வணக்கம். https://youtu.be/tnffdFb8Ht8

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: