Posted by: ramrajya | February 8, 2017

பன்னீர்செல்வமே புரட்சித்தலைவி ஜெயலலிதா அடையாளம் காட்டிய தமிழக முதல்வர்.எஸ்.வி.ரமணி.

 

பன்னீர்செல்வமே புரட்சித்தலைவி ஜெயலலிதா அடையாளம் காட்டிய தமிழக முதல்வர்.எஸ்.வி.ரமணி.

                                      பத்திரிகை செய்திகள்.

சாது  மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மற்றும் அவர் கும்பத்தினருக்கு எதிராக முதல்வர் பன்னீர் பொங்கிகயதன் மூலம் சர்வதேச ஹீரோவாகி உள்ளார்.

 அப்போது அவர் தெரிவித்தாவது: 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா என்னை பொருளாளர் பதவியில் நியமித்தார். பணியை நிறைவாக செய்திருக்கிறேன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது. சசிகலா குடும்பத்தினர் மிரட்டியதால் பதவியை ராஜினாமா செய்தேன் என்றார்.

 ஸ்டாலினை பார்த்து சிரித்தது மிகப்பெரிய குற்றமாகாது. மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியும்; மிருகங்களால் சிரிக்க முடியாது.

 நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை. மக்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்களின் முடிவை பொறுத்து எனது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். கவர்னருடனான எனது சந்திப்பு குறித்து பொறுத்திருந்து பாருங்கள். என்னை யாரும் பதவியில் இருந்து யாரும் நீக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 முதல்வரை மிரட்டியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பல்வேறு தலைவர்களும் ஓ.பி.எஸ்.,க்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

 முதல்வர் பன்னீர்செல்வம், மீண்டும் ஆட்சி அமைக்கும் பணியில் இறங்க வேண்டும். அவரை மிரட்டியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையான மற்றும் நிலையான ஆட்சி அமைந்தால், தி.மு.க., எதிர்க்கட்சியாகவே செயல்படும். முதல்வர் பன்னீரின் நல்ல திட்டங்களுக்கு, தி.மு.க., ஆதரவு கொடுக்கும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

 தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்: முதல்வரின் இந்த முடிவு வரவேற்க்கதக்கது. முதல்வரை செயல்படவிடாமல் சிலர் தடுத்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 முன்னாள் அமைச்சர் முனுசாமி: பன்னீர் செல்வத்தை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்து கையெழுத்து வாங்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசியல் சாசனபடி கவர்னர் ஆட்சியமைக்க வேண்டும். தன்மானத்துடன் பேட்டியளித்துள்ளார் பன்னீர் அவரை நான் வாழ்த்துகிறனே். இவரின் பேட்டி மூலம் சசிகலா தான் பன்னீரை செயல்படவிடாமல் செய்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

 தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன்: தற்போதைய நிகழ்வுகளுக்கு அ.தி.மு.க.,வே முழு முதற் காரணம். முதல்வரையே பதவியை விட்டு விலக சொல்லி உள்ளனர். அதிமுக., அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும். உண்மை நிலைக்கு ஏற்றவாறு பதில் வரும் என நம்புகிறேன்.

 எச்.ராஜா, பா.ஜ.க.  பன்னீர் செல்வம் சிறப்பாக ஆட்சி செய்தார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டி தற்போது ஜனநாயகத்தை கேள்விகுறியாக்கியுள்ளது. இது தனிப்பட்ட நிகழ்வு அல்ல. இது எர்பார்க்கப்பட்ட ஒன்று தான். தமிழகத்தை காப்பாற்ற நினைக்கும் ஓ.பி.எஸ்.,க்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.

 தமிழக மக்களின் விருப்பம் புரட்சித் தலைவி அடையாளம் காட்டிய பன்னீர்செல்வமே தமிழக முதல்வராக் இருக்க வேண்டும் என்பதுதான்.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: