Posted by: ramrajya | February 13, 2017

சசிகலா மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வரும் வரையில் கவர்னர் காத்திருக்கலாம்.எஸ்.வி.ரமணி.

சசிகலா மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வரும் வரையில் கவர்னர் காத்திருக்கலாம்.எஸ்.வி.ரமணி.

 இந்தியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரலும், சட்ட நிபுணருமான சோலி சோராப்ஜி, டெல்லியில் தந்திடி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

 தமிழ்நாட்டில் தற்போது யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்த முடிவை எடுப்பதை கவர்னர் தாமதப்படுத்துவது சட்டவிரோதம் என்று சொல்ல முடியாது. அது சட்டவிரோதம் ஆகாது. சசிகலாவின் கோரிக்கையை கவர்னர் நிராகரிக்கவில்லை. அவர் முடிவு எடுப்பதில்தான் தாமதம் ஏற்படுகிறது. நிராகரிக்காத பட்சத்தில் அது சட்டவிரோதம் ஆகாது.

 சசிகலாவுக்கு எதிரான வழக்கின் மீதான தீர்ப்பு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அந்த தீர்ப்பு வரும்வரையில் காத்து இருப்பது எந்த வகையிலும் தவறு இல்லை.

 தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று இதுகுறித்து என்னிடம் ஆலோசித்தார்.

 சாதாரணமாக கவர்னர் மந்திரிசபையின் ஆலோசனைப்படியும், அங்கு என்ன கோரிக்கை வைக்கப்படுகிறதோ அதனையும் நிறைவேற்றுவார்.

 சசிகலா மீது வழக்கு நிலுவையில் உள்ளது. மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.

 கீழ்க்கோர்ட்டில் அவர் மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது. ஐகோர்ட்டு அதனை நிராகரித்தது. ஆனால் மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவர் மீது சுப்ரீம்கோர்ட்டும் குற்றம் சுமத்தினால் நிலைமை என்னவாகும்? இப்போது அவர் பதவிஏற்றுக்கொண்டால் அப்படி ஒரு நிலைமை உருவாகும்போது அவர் பதவி விலக வேண்டும்.

 எனவே, இதுபோன்ற விசித்திரமான சூழ்நிலையில் கவர்னர் ஆழமாக சிந்தித்து இருப்பார். அதன் விளைவாக சற்று தாமதப்படுத்தலாம்.

 சுப்ரீம் கோர்ட்டு ஓரிரு நாட்களில் தீர்ப்பை வெளியிடாமல் ஒரு வாரத்துக்கும் மேல் தாமதப்படுத்தினால் அப்போது கவர்னர் வேறு மாதிரி முடிவு எடுக்கலாம். தற்போது அவர் சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. ஒத்திப்போட்டு இருக்கிறார். இது தவறானது அல்ல.

 சுப்ரீம் கோர்ட்டுக்கு இது எத்தனை முக்கியமான வழக்கு என்று தெரியும். புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு சோலி சோராப்ஜி கூறினார்.

 ஆகவே பன்னீரும்,சசியும் ஓரூ,இரு தினங்கள் பொறுப்பதில் தவறு கிடையாது.அதிமுக கட்சியின் எம்.எல்.ஏக்களும் நன்கு சிந்தித்து அடிக்கடி தடம் புரளாமல்,மக்களின் முதல்வர் அம்மாவின் திட்டங்களையும்,கொள்கைகளையும் நிறைவேற்றும் திறமை படைத்தவர் யார் என்பதில் நல்ல முடிவு எடுக்கலாம்.சட்ட மன்ற உறுப்பினர்கள்,தங்கள் சுய நலத்திற்காக எடுக்கும் முடிவை விட,மக்கள் நலத்திற்காக எடுக்கும் முடிவைத்தான் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். நன்றி,வணக்கம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: