Posted by: ramrajya | February 16, 2017

சொந்த தொகுதியில் பணியாற்றாமல்,விடுதியில் தங்கி உள்ள எம்.எல்.ஏக்களை நம்பி ஆளுநர் ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது.எஸ்.வி.ரமணி.

சொந்த தொகுதியில் பணியாற்றாமல்,விடுதியில் தங்கி உள்ள எம்.எல்.ஏக்களை நம்பி ஆளுநர் ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது.எஸ்.வி.ரமணி.

 கூவத்தூரில்  தங்கி இருக்கும் எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிக்கு சென்று அதன் பின் ஆளுநர் கூப்பிடும் நேரத்தில் வந்து ஓட்டளித்தால் போதாதா? அவர்களை அதிமுக தலைமை ஒரே இடத்தில் வைத்திருக்கும் காரணம் என்ன? தொகுதி வேலைகளை புறக்கணித்து ஒரே இடத்தில் அவர்கள் இருக்கும் காரணம் என்ன? மனம் மாறிவிடுவார்கள் என்றால்,அவர்களை நம்பி எப்படி ஆளுநர்  எப்படி ஆட்சியை ஒப்படைக்க முடியும்?

 கடந்த 8 நாட்களாக கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறை வைகப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. சசி தரப்பினர் அனுமதி வழங்கிய எம்.எல்.ஏ.,க்கள் சிலர் மட்டுமே பேட்டியளித்து வந்தனர். இந்நிலையில் அ.தி.மு.க.,வின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட சிலர் மீது,மதுரை தெற்கு தொகுதி  எம்.எல்.ஏ., சரவணன் கொடுத்த புகாரின் பேரின், இந்திய தண்டனை சட்டமான ஐ.பி.சி.,யின் கடுமையான பிரிவுகளின் கீழ், கூவத்தூர் போலீசார் நேற்று(பிப்.,15) வழக்கு பதிவு செய்தனர்.

 இதனைத் தொடர்ந்து கோல்டன் பேரிசார்ட் நுழைவாயிலில், எம்.எல்.ஏ.,க்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் நரசிம்மன்(திருத்தணி), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), தங்கதுரை(நிலக்கோட்டை), குணசேகரன்(திருப்பூர் தெற்கு தொகுதி), சத்திய நாராயணன்(தி.நகர்) மற்றும் கூட்டாக பேட்டியளித்த 10 பெண் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 25 எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ஒரே நாளில் பேட்டி கொடுத்தனர். சொந்த தொகுதியில் பணியாற்றாமல்,விடுதியில் தங்கி உள்ள எம்.எல்.ஏக்களை நம்பி ஆளுநர் ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது. இவர்கள் முதலில் தங்கள் தொகுதிகளுக்கு செல்லட்டும். அதன்பின் ஆளுநர் ஓட்டெடுப்பு நடத்துவதைப்ப்ற்றி முடிவு எடுப்பதே,நிலையான ஆட்சிக்கு வழி வகுக்கும்.

 அரசியலமைப்பு சட்டப்படி அரசமைக்க கவர்னர் நடவடிக்கை எடுப்பார்என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 தமிழக அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அருண் ஜெட்லி தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அதிகாரப்போட்டி நிலவுகிறது. இது அக்கட்சியின் தனிப்பட்ட விவகாரம்.

 தமிழக நிகழ்வுகளுக்கும் பா.ஜ., மற்றும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பது அவர்களது உள்கட்சி விவகாரம். அரசியலமைப்பு சட்டப்படி அரசமைக்க கவர்னர் நடவடிக்கை எடுப்பார். என்று அவர் தெரிவித்தார்.

 பா.ஜ.க. மீது வீண் பழி சுமத்தாமல்,எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று அங்கு அவர்களுக்கு ஓட்டளித்த மக்களிடம் ஒப்புதல் பெற்று,பின் சட்டமன்றத்தில் ஆளுநர் கூப்பிடும் சமயத்தில் ஓட்டளிக்கட்டும். நன்றி,வணக்கம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: