Posted by: ramrajya | February 17, 2017

மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.நடராஜ். எஸ்.வி.ரமணி.

மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.நடராஜ். எஸ்.வி.ரமணி.

 பத்திரிகை செய்திகளின் படி, சென்னை: மக்கள் விருப்பப்படியே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தருவேன் என மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது: அதிமுக இரண்டாக பிரிந்து வாக்கெடுப்பு நடத்துவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். சட்டப்பேரவையில் நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நானும் பங்கேற்பேன் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இரு அணிகளும் ஒன்றாக செயல்பட வேண்டும் எனவும் நடராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நடராஜ் ஆதரவு உண்மையானால், ஓ.பன்னீர்செல்வம் அணியில் 11 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 கடந்த தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மகத்தான வெற்றி பெற வேண்டுமென்றுதான் வாக்களித்தார்கள். மக்கள் அம்மாவை வெற்றிபெறச்செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அம்மா அவர்கள், தான் சிறையில் இருந்தபோது,பன்னீர் செல்வம் அவர்களை முதல்வர் பணிகளை ஏற்றுக்கொள்ள வைத்தார்.மக்கள் இன்றும் இதை மறக்கவில்லை.ஆகவே அம்மாவின் உண்மையான விசுவாசிகள் பன்னீர் செல்வம்  அணியினரை ஆதரிக்கவேண்டியதுதான் மக்களின் விருப்பம்.

 மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நடராஜ் அவர்களின் செயலை மற்ற எம்.எல்.ஏ.க்களும் சிந்தித்து பார்த்து புரட்சித்தலைவி அவர்கள்  பெயருக்கு களங்கம் உண்டாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நன்றி,வணக்கம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: