Posted by: ramrajya | February 21, 2017

பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திமுக தொண்டர்கள்,புடவை பரிசளிப்பும்,கைதும். எஸ்.வி.ரமணி.

பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திமுக தொண்டர்கள்,புடவை பரிசளிப்பும்,கைதும். எஸ்.வி.ரமணி.

பத்திரிகை செய்திகள்.

இதைப்போல் தொகுதி பக்கம் செல்ல தயங்கும் எம்.எல்.ஏ.க்கள் போலீஸ் பாதுகாப்பு கேட்கின்றனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக, கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா அணியை சேர்ந்த 122 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கினர்.

கடந்த 10 நாட்களாக கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழக சட்டசபையில் நேற்றுமுன்தினம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். கூவத்தூரில் இருந்து நேராக அழைத்து வரப்பட்ட அவர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா அணியை சேர்ந்த முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றி பெற செய்தனர்.

இந்தநிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேற்று முன்தினமே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே தொகுதி மக்களுடைய கருத்துகளை கேட்காமல், தன்னிச்சையாக முடிவு எடுத்து சசிகலா அணியை ஆதரித்ததற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு சரியான பாடம் புகட்டுவோம். அவர்களை தொகுதிக்குள் நுழையவிடாமல் விரட்டியடிப்போம்என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.

இதனால், தொகுதி பக்கம் செல்லவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஏற்கனவே தங்கிய கூவத்தூர் சொகுசு விடுதிக்கு செல்லலாம் என்றால், அந்த விடுதியும் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. எனவே, மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் முடங்கிப் போய் இருக்கின்றனர்.

தொகுதிக்கு செல்ல அவர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. தொகுதி பக்கம் தாங்கள் செல்ல வேண்டும் என்றால், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடைய வீடு, அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.அம்மாவை ஆதரிப்பவர்கள்,அம்மா சுட்டிக்காட்டிய பன்னீர் செல்வத்தை அல்லவா ஆதரித்து இருக்கவேண்டும்.

போலீஸ் பாதுகாப்பை விட மக்கள் பாதுகாப்பே சிறந்த துணை என்பதை,இப்போது எம்.எல்.ஏக்கள் உணர்ந்திருப்பார்கள்.நன்றி,வணக்கம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: