Posted by: ramrajya | February 22, 2017

சின்னம்மாவின் ரூ.10 கோடி அபராத தொகையும்,தி.நகர் எம்.எல்.ஏயின் நடை பயிற்சியும்.

சின்னம்மாவின் ரூ.10 கோடி அபராத தொகையும்,தி.நகர் எம்.எல்.ஏயின் நடை பயிற்சியும்.

பத்திரிகை செய்திகள்.

தியாகராயநகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யநாராயணன்.  சசிகலா அணி  ஆதரவாளராக இருந்து வருகிறார். கூவத்தூர் கோல்டன் பே ரிசாட்டில் தங்கியிருந்தபோது நடைபயிற்சி உடையில் வெளியே வந்து, எங்களை யாரும் கடத்த வில்லை. விடுதியில் தங்கி யிருக்கிறோம். நல்லாத் தான் இருக்கிறாம். தினமும் மட்டன் போட்டு மட்டையாக்குகிறார்கள் என்று ஏக தாளத்துடன் கூறினார்.

சென்னைக்கு வந்த பிறகு பொதுமக்களை சந்திக்க முடியாமல் தவிக்கிறார். நேற்று ஜீவா பூங்காவுக்கு நடைபயிற்சிக்கு சென்றார். வழக்கமாக அந்த பூங்கா வுக்குத்தான் நடை பயிற்சி செல்வார். இதுவரை அவரை பார்த்ததும் சிரித்தபடி செல்லும் பொதுமக்கள் நேற்று சிரிக்கவில்லை. மாறாக அவர்களின் முகங்களில் கோபக் கனல்தான் தெரிந்தது.

பத்துக்கும் மேற்பட்டவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு சொகுசு விடுதியில் தங்கியது, சசிகலா தரப்புக்கு ஆதரவாக சென்றது பற்றி வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த சத்யா பொதுமக்களை எவ்வளவோ சமரசப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் கூட்டமும் அதிகரித்தது.

பொதுமக்களிடம் சிக்கி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சில நிமிடங்கள் தவித்தார். பொதுமக்கள் மிகவும் சூடானதால் நடைபயிற்சியை தொடர முடியாமல் அங்கிருந்து வெளியேறினார். பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் சத்யா தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்.

நான் எனது பணியை தொய்வில்லாமல் தொகுதி மக்களுக்கு செய்வேன். நான் பணி செய்யாவிட்டால் மக்கள் என்னிடம் கேள்வி கேட்கட்டும். சிலரது எதிர்ப்பால் பூங்காவுக்கு நடைபயிற்சிக்கு செல்வதை நிறுத்த மாட்டேன். வழக்கம் போல் நடைபயிற்சி செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதைப்போல்,ரூ.10 கோடி அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா மேலும் 13 மாதங்கள் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்று பெங்களூரு மத்திய சிறை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். என்று பத்திரிகை செய்திகள் சொல்லுகின்றன.

இந்த நிலையில் சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக முன்னாள் மந்திரிகள் வளர்மதி, கோகுல இந்திரா, அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாராவுக்கு வந்தனர். ஆனால் அவர்கள் சிறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர்.

பொதுமக்களுக்கு செய்யவேண்டிய பணிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.அவைகளை கவனிப்பதை விட்டு,விட்டு பெங்களூருக்கு படை எடுக்கவேண்டுமா? பொதுமக்களே சிந்தியுங்கள்.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: