Posted by: ramrajya | February 23, 2017

குடியாத்தம்: தொகுதி மக்களும்,போயஸ் கார்டன் இல்லத்தை சிறையாக்க நினைக்கும் சசிகலாவும். எஸ்.வி.ரமணி.

குடியாத்தம்: தொகுதி மக்களும்,போயஸ் கார்டன் இல்லத்தை சிறையாக்க நினைக்கும் சசிகலாவும். எஸ்.வி.ரமணி.

 பத்திரிகை செய்திகள்.

குடியாத்தம்: தொகுதி மக்களின் எதிர்ப்பை விட சசிகலாவிற்கு சக்தி அதிகமா? என்று கேள்வி கேட்டு, குடியாத்தம் தொகுதி மக்கள் போஸ்டர் ஒட்டி எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபனை கேள்வி கேட்டுள்ளனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கனவில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டார். இதனால், சசிகலா தனக்கு பதிலாக எடப்பாடி தொகுதி எம்எல்ஏ பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். இதற்கு 122 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வாக்களித்து ஆதரவளித்துள்ளனர். எம்எல்ஏக்களின் இந்த முடிவை தொகுதி மக்கள் ஏற்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குடியாத்தம் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபனும் மக்கள் விரும்பாத செயலையே செய்திருக்கிறார். இதனால் கடுப்பான தொகுதி மக்கள், தமிழகத்தின் கருப்பு தினம் பிப்ரவரி 18 என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
மக்கள் எதிர்ப்பை மீறி சசிகலா வகையறாவுக்கு ஆதரவை ஏன் அளித்தீர்கள்? எங்கள் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் அவர்களே” என்று கேள்வி கேட்டுள்ளனர் தொகுதி மக்கள்.

மேலும், “மக்கள் எதிர்ப்பை விட மன்னார்குடி கும்பலுக்கு சக்தி அதிகமா? உங்களை ஜெயிக்க வைத்த மக்களையும் நீங்கள் மதிக்கவில்லை. உங்களை சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நிறுத்திய முதல்வர் ஜெயலலிதாவையும் நீங்கள் மதிக்கவில்லை. உங்களை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும்” என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் மர்மம் நிறைந்த மரணத்தில் ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன என்பது அனைவரும் அறிந்தது. அந்த சந்தேகத்திற்கு மூலகாரணமான மன்னார்குடி கும்பலுக்கு எப்படி ஆதரவு அளிக்க மனம் வந்தது உங்களால்” என்று ஜெயலலிதா மரணம் குறித்தும் குடியாத்தம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டு மக்கள் மத்தியில் எப்படி வருவீர்கள்.. குடியாத்தம் மக்கள் என்ன மானம் கெட்டவர்களா! உங்களை போல்.. இனி எங்களால் குடியாத்தம் தொகுதியின் சட்டமன்ற உறப்பினராக உங்களை ஏற்க முடியாது” இப்படிக்கு குடியாத்தம் தொகுதி மக்கள் என்ற போஸ்டர் குடியாத்தம் முழுவதும் ஒட்டப்பட்டு எம்எல்ஏ ஜெயந்திபத்மநாபனை கேள்வி கேட்டு வருகின்றனர் தொகுதி மக்கள்.

சென்னை: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழகத்துக்கு மாற்றுவதில் தீவிரமாக இருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு. தமிழகத்துக்கு மாற்றப்படும் சசிகலாவை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா பங்களாவையே சிறையாக மாற்றி தங்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி இதற்காக முதல் குரல் கொடுத்திருக்கிறார்.

அப்படி தமிழகத்துக்கு மாற்றப்படும் சசிகலாவை புழல் சிறையில் அடைக்காமல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா பங்களாவையே சிறையாக மாற்றி அங்கேயே தங்க வைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு திட்டமிட்டு வருகிறதாம். இதற்கான சட்ட ஆலோசனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் உச்சநீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் சசிகலாவை உடனே தமிழகத்துக்கு மாற்றிவிட முடியாது என மூத்த வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவை ஜெயலலிதாவின் பங்களாவிலே சிறை வைக்கிறோம் என்கிற நடவடிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மேற்கொண்டால் நிச்சயம் கடும் எதிர்ப்புகள் தமிழகத்தில் உருவாகவே செய்யும். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தைத் தேடி ஏன் அலையவேண்டும். மக்களே நீங்களே பதில் சொல்லுங்கள்.நன்றி,வணக்கம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: