Posted by: ramrajya | February 27, 2017

சிவசேனா இந்துத்வா கொள்கையில் பற்று உள்ள கட்சியாக இருந்தால் பா.ஜ.க.உடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டும்.

சிவசேனா இந்துத்வா கொள்கையில் பற்று உள்ள கட்சியாக இருந்தால் பா.ஜ.க.உடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டும்.

மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதாவை சேர்ந்த தேவேந்திரபட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருக்கிறார். பா.ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி இங்கு நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் கருத்து வேறுபாடு காரணமாக பாரதீய ஜனதாவும், சிவசேனாவும்
தனித்தனியே போட்டியிட்டன. இதில் பெரும்பாலான இடங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

மும்பை மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. சிவசேனா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் சிவசேனா 84 இடங்களிலும், பா.ஜனதா 82 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்களில் 3 பேர் சிவசேனாவில் இணைந்து உள்ளனர். ஆனாலும் மேயர் பதவியை பிடிக்க தேவையான 114 இடங்கள் என்ற பெரும்பான்மை எண்ணிக்கை இரு கட்சிகளுக்கும் கிடைக்காததால் மேயர் பதவியை பிடிப்பது யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவசேனாவை சேர்ந்த ஒருவரே மேயர் பொறுப்பேற்பார் என்று அக்கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே தெரிவித்து உள்ளார்.

இதனால் மும்பை மாநகராட்சி தேர்தலில் 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் ஆதரவை உத்தவ்தாக்கரே கேட்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவை ஆதரிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மும்பை நகர தலைவர் சஞ்சய் நிரூபம் கூறியதாவது:-

மும்பை மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்றவோ அல்லது மேயர் பதவிக்கோ சிவசேனாவை காங்கிரஸ் ஆதரிக்காது. சிவசேனாவை எதிர்ப்பது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மும்பை மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்ற சிவ சேனாவை,காங்கிரஸ் ஆதரித்தாலோ,காங்கிரசின் உதவியை சிவா சேனா நாடிநாலோ இருகட்சிக்குமே கேவலம். சிவசேனா இந்துத்வா கொள்கையில் பற்று உள்ள கட்சியாக இருந்தால் பா.ஜ.க.உடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டும்.மக்கள் பாஜக் சிவ சேனா கூட்டணியையே ஏற்றுக் கொள்வார்கள்.நன்றி,வணக்கம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: