Posted by: ramrajya | February 27, 2017

நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டம் தங்களுக்கு பாதகமானது என மக்கள் சொல்கிறார்கள்.

நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டம் தங்களுக்கு பாதகமானது என மக்கள் சொல்கிறார்கள்.

வறட்சி மிகுந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓரளவு செழிப்பான பகுதி நெடுவாசல். காவிரி ஆற்றுப் பாசனம் பொய்த்த நிலையில் ஆழ்குழாய் தண்ணீர் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதானத் வாழ்வாதாரத் தொழிலாக உள்ளது. தற்போது 300 முதல் 400 அடியில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

 பொருளாதார விரிவாக்கத்திற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் 15.2.2017 ல் கூடியது. இக்கூட்டத்தில் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான முதலீட்டை அதிகரிப்பது, பன்னாட்டு கம்பெனிகள் முதலீடு செய்ய அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இந்தியாவில் பூமிக்கடியில் ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்ட இடங்களில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களுக்கு எந்தவொரு விளக்கத்தையும் மத்திய அரசோ, ஓஎன்ஜிசி நிறுவனமோ தரவில்லை.

 மேலும் விவசாயம் நலிந்து வரும் சூழலில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமலும், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்காமம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை துவங்குவது சுமார் 50,000 ஏக்கர் விவசாய நிலத்தை பாதிக்கும்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் இப்பகுதி மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. மாறாக நீராதாரத்தை மென்மேலும் சுரண்டுவதற்கும், விவசாயம் முடங்குவதற்கும், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முடக்குவதற்கும், சுற்றுச்சூழல் கேட்டிற்குமே வழிவகுக்கும்.

 நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடவேண்டியதாகும். மக்களுக்கு பாதகமானது. பாதகமில்லை என்று அரசு கருதினால்,மக்களுக்கு விளக்கிச்சொல்ல வேண்டும்.நன்றி,வணக்கம். https://youtu.be/obRL1eUPXlI

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: