Posted by: ramrajya | February 28, 2017

ஆஸ்கர் விருதில்,மூன் லைட், லா லா லேண்டை முந்தி வெற்றி பெற்றது. எஸ்.வி.ரமணி.

ஆஸ்கர் விருதில்,மூன் லைட், லா லா லேண்டை முந்தி வெற்றி பெற்றது. எஸ்.வி.ரமணி.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் லா லா லேண்ட் என்ற படம் 6 விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகராக கேசி அப்லெக்கும், சிறந்த நடிகையாக எம்மா ஸ்டோனும் தேர்வு செய்யப்பட்டனர்.

89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இவ்விழாவைக் காண உலகம் முழுவதிலும் இருந்து திரைப்படக் கலைஞர்கள் திரண்டு இருந்தனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை ‘மூன்லைட்’ என்ற படம் தட்டிச் சென்றது. ‘லா லா லேண்ட்’ படத்துக்கும் இதற்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் மூன்லைட் விருதுக்கு முந்திக் கொண்டது.

அதே நேரம் லா லா லேண்டில் நடித்த 28 வயது எம்மா ஸ்டோன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இசைக் காவியமான லா லா லேண்டில், ஜாஸ் இசைக்கலைஞர் மீது காதலில் விழுபவராக எம்மா ஸ்டோன் சிறப்பாக நடித்திருந்தார். சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதும் இந்த படத்துக்கே கிடைத்தது. இந்த படத்தின் இயக்குனர் டேமியன் சாஜெல்லே (வயது 32) விருதை பெற்றார். மிக இளம் வயதில் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் என்ற பெருமையும் இதன் மூலம் அவருக்கு கிடைத்தது.

சிறந்த நடிகருக்கான விருது ‘மான்செஸ்டர் பை த சீ’ என்ற படத்தில் நடித்த கேசி அப்லெக்கிற்கு கிடைத்தது. குணசித்ர நடிப்பில் வெளுத்து வாங்கும் 41 வயது கேசி அப்லெக்கின் பெயர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், இப்போதுதான் அதிர்ஷ்ட தேவதை அவரை தழுவி இருக்கிறாள்.

இது தவிர சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை 43 வயது மஹெர்சலா அலி(மூன்லைட்) பெற்றார். நடிப்பிற்காக ஆஸ்கர் விருது பெற்ற முதல் முஸ்லிம் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. சிறந்த துணை நடிகைக்கான விருது வயோலா டேவிசுக்கு(பென்சஸ்) கிடைத்தது.

ஒட்டுமொத்தத்தில் அதிக விருதுகளை லா லா லேண்ட் அள்ளிச் சென்றது. அந்த படம் சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த பாடல், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய 6 பிரிவுகளில் விருதுகளை பெற்றது.

மூன் லைட் சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த தழுவல் திரைக்கதை ஆகிய 3 பிரிவுகளில் ஆஸ்கரை வென்றது. மான்செஸ்டர் பை த சீ மற்றும் ஹாக்‌ஷா ரிட்ஜ் ஆகியவை தலா 2 விருதுகளை பெற்றன.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த படத்துக்கான அறிவிப்பில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. விழாவை தொகுத்து வழங்கியவர்கள், முதலில் லா லா லேண்ட் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தனர். இதனால் அந்த படக்குழுவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால் அவர்களுடைய மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை.

தொகுப்பாளர்கள் உடனடியாக தங்களது தவறை திருத்திக் கொண்டு மூன் லைட் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்று அறிவித்தனர். ஆனால் இதை வேடிக்கையாக கூறுகின்றனர் என்றே விழா அரங்கில் இருந்தவர்கள் கருதினர்.
இதையடுத்து, விருதுக்கு தேர்வான பெயர்களை தயாரித்து வைக்கப்பட்டு இருந்த உறைகள் மாறிவிட்டதால் சிறந்த படம் பற்றிய அறிவிப்பு தவறுதலாக இடம் பெற்றுவிட்டது என்று மீண்டும் அறிவித்து மூன் லைட்தான் சிறந்த படம் என்பதை உறுதி செய்தனர். நன்றி,வணக்கம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: